கம்பராமாயணம் 9088 · யுத்த 26.104
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
துயில் துறந்தான் - உறக்கத்தை விட்டொழித்தவனாகிய இலக்குவன்; தீ ஒப்பன, உரும் ஒப்பன, உயிர் வேட்டன - (சுட்டெரித்தலால்) தீயினை ஒத்தனவும், (தாக்கி அழித்தலால்) இடியினை ஒத்தனவும், (பகைவரின்) உயிரை விரும்பிப் பற்றுவனவும்; திரியும் பேய் ஒப்பன பசி ஒப்பன பிணி ஒப்பன - (திரிந்து ஊன்கவர்தலால்) திரிதலை இயல்பாக உடைய பேயினை ஒத்தனவும், (உள்ளிருந்து வருத்துதலால்) பசியை ஒத்தனவும் (உள்ளும் புறமும் ஒப்ப வருத்துதலால்) நோயினை ஒத்தனவும்; பிழையா மாயக் கொடு வினை ஒப்பன, மனம் ஒப்பன - (விடாது பற்றி விளைவினைக்கொத்தலில்) தப்பாத சூழ்ச்சி மிக்க தீவினையினை ஒத்தனவும், (விரைந்து பற்றுதலால்) மனத்தினை ஒத்தனவும்; கழுகின் தாய் ஒப்பன சில வெங்கணை துரந்தான் - (ஊனுணவு கொடுத்துக் காத்தலால்) கழுகெத்துக்குத் தாயினை ஒத்தனவும் ஆகிய வெம்மை மிக்க அம்புகள் சிலவற்றை (இந்திரசித்தன் மேல்) விரைந்து செலுத்தினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like fire, like thunder, thirsting for lives, like roaming
- ghouls, like hunger, like disease, like the unfailing
- cruel deeds of illusion, like the mind, like a mother
- to the vultures — such shafts he let fly, he who had forsaken sleep.
What the poem says
Ilakkuvaṉ, called 'he who forsook sleep' because he kept watch over Irāmaṉ and Cītai through all the years of exile, shoots his first arrows. The verse piles up comparisons, each of which the commentary explains.
The arrows burn like fire and strike like thunder. Like roaming ghouls they seek flesh, like hunger and disease they torment within and without, and like past evil deeds they never fail to catch their target. They are swift as thought, and like a mother to vultures, because they provide them with food.