கம்பராமாயணம் 9090 · யுத்த 26.106
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆயோன், நெடுங்குருவிக் குலம் எனலாம் சில அம்பால் - அவ் இந்திரசித்து, நெடிய குருவிக் கூட்டம் என்று சொல்லுதற்குரிய சில அம்புகளால்; போய் ஓடிடத் துரந்தான் - (இலக்குவன் ஏவிய அம்புகளை) நீங்கி ஒழியும் படி விலக்கினான்; அவை “பொறியோ” என மறிய - (அங்ஙனம் இலக்குவனின் அம்புகளைத் துண்டித்த பின்பும்) அந்த அம்புகள் தீப் பொறியோ என்று எண்ணுமாறு மறிந்து செல்ல; தூயோனும், அத்துணை வாளிகள் தொடுத்தான் அவை தடுத்தான் - தூயவனாகிய இலக்குவனும் அத்துணை அம்புகளைத் தொடுத்து எய்து அவற்றை விலக்கினான்; தீயோனும் அக்கணத்து ஆயிரம் நெடுஞ்சாரிகை திரிந்தான் - கொடியவனாய இந்திர சித்தும் அப்பொழுது ஆயிரம் முறை நெடிய வட்டமாக(ப் போர்க்களமெங்கும்) சுற்றித் திரிந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- That one, with a few arrows like a long flock of sparrows,
- drove them off so they went flying; as these turned back, so that men asked 'Are they sparks?',
- the pure one too fitted as many shafts and stopped them;
- and the wicked one, in that instant, wheeled about in a thousand long circles.
What the poem says
The duel goes back and forth. Intiracittu sends out arrows that fly like a long flock of small birds and drive off Ilakkuvaṉ's volley. His arrows keep coming on, glittering like sparks of fire.
Ilakkuvaṉ, called 'the pure one', answers with an equal number and stops them. Intiracittu, 'the wicked one', then drives his chariot round the battlefield in a thousand great circles.