கம்பராமாயணம் 9093 · யுத்த 26.109
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“விசிகம் விண் செல்கில செல்கின்றன” என - (இருவரும் எய்த) அம்புகள் விண்ணிடத்தே செல்கில, அன்றிச் செல்கின்றன என்று, கண்டறியுமாறு; இமையோர் கண்செல்கில மனம் செல்கில - தேவருடைய கண்கள் (ஊடுருவிச் செல்ல மாட்டாதன வாயின. மனமும் செல்ல முடியாதனவாயின; கணிதம் உறும் எனின் ஓர் எண் செல்கில - கணக்கிட்டுக் கூறுதல் பொருந்து மெனின் (அளவிடுதற்கு) எண்கள் போதியனவாகச் செல்கில; நெடுங்காலவன் இடை செல்கிலன் - நெடிய வாயு தேவன் அவற்றிடையே ஊடுருவிச் செல்லுவதற்கு இயலாதவனாயினான்; உடல் மேல் புண் செய்வன அல்லால் - (அவ்விருவருடைய அம்புகளும்) உடம்பின் மீது புண்களைச் செய்வதன்றி; ஒரு பொருள் செல்வன தெரியா - தாம் ஒரு பொருளாய்ச் செல்லுந்திறங்களைத் தெரிந்துணர முடியாதனவாயின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- To tell whether the arrows were going through the sky or not,
- the eyes of the gods could not follow; their minds could not follow; if one tried to count, no
- number would reach; the great wind could not pass between them; apart from the wounds
- they made on bodies, no one could see them travel as things at all.
What the poem says
The arrows of the two fighters are too fast and too many to follow. The gods' eyes cannot track them, their minds cannot keep up, and no number is large enough to count them.
They fly so thick that even Vāyu, the wind, cannot slip between them. Nobody sees the arrows in flight; their passage is known only from the wounds they leave on the warriors' bodies.