கம்பராமாயணம் 9094 · யுத்த 26.110
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நெடுநாண் ஒலி இடி ஆம் எனப் பொடியாய் நெரிந்து ஏறின - நெடியவில்லின் நாணோசையானவை இடியோசை என்று சொல்லும்படி யாவையும் தூளாகிச் சிதையும்படி எங்கும் பரவின; படர்வான் நிறை உருமின் சொரிந்து ஏறின சுடுவெங்கணை - பரவிச் செல்லுதற்கு இடமாகிய வானத்தில் (ஆற்றல்) நிறைந்த இடியினை யொத்துச் சொரிந்ததனால் வெளிப்பட்ட சுட்டெரிக்கும் தன்மையவாகிய அம்புகள்; திசையாவையும் எரிந்து ஏறின - திசைகள் எல்லாவற்றிலும் எரிந்து மேற் சென்றன; உலகு யாவையும் கனல் வெம் புகை கதுவ - (அவற்றால்) உலகமெங்கும் தீயின் வெம்மை மிக்க புகைப் படலம் சென்று மூட; தொடுந்தாரகை முழுதும் கரிந்து ஏறின - வானத்தில் இயைந்துள்ள விண்மீன்கள் முழுவதும் கரிந்து போயின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Burning, they rose over all the quarters; like thunder, crushing things
- to powder, the sound of the long bowstrings spread; poured out like thunderbolts filling the wide sky,
- the scorching cruel arrows rose up; all the stars set in the sky
- were charred as they went up, while hot smoke from the fire seized all the worlds.
What the poem says
The verse describes the battle as a cosmic fire. The twang of the bowstrings rolls out like thunder strong enough to grind things to dust, and the arrows fly up blazing in every direction like thunderbolts.
Their smoke spreads over the whole world, and even the stars fixed in the sky are scorched.