கம்பராமாயணம் 9095 · யுத்த 26.111
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சிலை நாண் ஒலி - வில் நாணின் ஓசைகள்; திசையாவையும் வெடிக்கின்றன - திசை எல்லாவற்றிலும் வெடிக்கின்றனவாய்; விழுகின்றன இடிவந்து இடிக்கின்றன - விழும் இடிகளை ஒத்துவந்து பெருமுழக்கம் செய்தன; இருவாய்களும் எதிராக் கடிக்கின்றன கனல் வெங்கணை - இரு முனைகளும் பொருந்த ஒன்றை ஒன்று எதிர்ப்பட்டுக் கடிப்பனவாகிய கனலினைச் சொரியும் வெம்மையுடைய அம்புகள்; கலிவான் உறவிசைமேல் வெங்கனல் பொறி பொடிக்கின்றன - ஒலிக்கும் வானத்திடத்தே பொருந்தச் சென்ற வேகத்தால் மேலே வெம்மை உடைய தீப்பொறிகளைத் தோற்றுவிப்பனவாயின; புலவோர் இவை கண்டனர் - தேவர்கள் இவற்றைக் கண்டனர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Bursting through all the quarters, like falling thunderbolts coming down
- and crashing, went the sound of the bowstrings; the hot fiery arrows,
- point meeting point, bit at each other; as they reached the roaring sky, from their speed
- they sprayed out sparks of hot fire; the gods saw all this.
What the poem says
The noise of the two bowstrings bursts across every direction like thunderbolts crashing down. Arrows from the two sides meet point to point in mid-air and seem to bite each other.
Their speed through the roaring sky makes them throw off showers of burning sparks. The gods look on at the spectacle.