கம்பராமாயணம் 9096 · யுத்த 26.112

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கடல் வற்றின; மலை உக்கன; பருதிக் கனல் கதுவுற்று
உடல் வற்றின; மரம், உற்றன கனல் பட்டன; உதிரம்
சுடர் வற்றின; சுறு மிக்கது; துணிபட்டு உதிர்கணையின்,
திடர் பட்டது, பரவை குழி; திரிவுற்றது புவனம்.

பொருள் · Meaning in Tamil

கடல் வற்றின, மலை உக்கன - (இருவரும் ஏவிய அம்புகளின் வெம்மையால்) கடல்களெல்லாம் (நீறி வற்றின, மலைகள் பிளந்து சிதறின; பருதி உடல் கனல் கதுவுற்று பற்றின - கதிரவனுடைய உடற்பகுதிகள் தீச்சுடர்களால் கதுவப்பெற்றுப் பற்றி எரிந்தன; மரம் கனல் உற்றன பட்டன - மரங்கள் தீப்பற்றி அழிந்தன; உதிரம் சுடர் வற்றின; சுறு மிக்கது - (வீரர்களின் உடலிலுள்ள) இரத்தம் தீச் சுடரின் வெம்மையால் வற்றின; (உடம்பில்) சுறு நாற்றம் மிக்குத் தோன்றியது; பரவை குழி துணிபட்டு உதிர் கணையின் திடர்பட்டது - கடற்பரப்பாகிய பள்ளம் முறிபட்டுச் சிதறிய அம்புகளால் மேடாயிற்று; புவனம் திரிவுற்றது - உலகம் (ஒரு நிலையில் நில்லாது) சுழன்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The seas dried up; the mountains crumbled; seized by fire,
  2. the sun's body caught alight; the trees caught fire and perished; blood
  3. dried up in the flames; the stench of burning grew strong; with the arrows that fell broken,
  4. the hollow of the ocean was heaped into high ground; the world reeled.

What the poem says

The heat of the arrows is so great that it seems to wreck the universe. The seas dry up, mountains split, the sun itself catches fire, and trees burn.

The blood in the warriors' bodies dries in the heat, and the smell of scorched flesh fills the air. So many broken arrows fall into the ocean that its basin is filled up into dry land, and the whole world spins out of balance.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṭal vaṟṟiṉa; malai ukkaṉa; parutik kaṉal katuvuṟṟu
uṭal paṟṟiṉa; maram, uṟṟaṉa kaṉal paṭṭaṉa; utiram
cuṭar vaṟṟiṉa; cuṟu mikkatu; tuṇipaṭṭu utir kaṇaiyiṉ,
tiṭar paṭṭatu, paravaik kuḻi; tirivuṟṟatu puvaṉam.