கம்பராமாயணம் 9097 · யுத்த 26.113
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எரிகின்றன அயில் வெங்கணை இரு சேனையும் இரியத் திரிகின்றன - (சுடர்விட்டு) எரிவனவாகிய கூரிய வெம்மையினையுடைய அம்புகள், இருதிறச் சேனைகளும் அஞ்சி நிலை கெட்டு ஓடும்படி திரிபவை; புடைநின்றில சிதறி திசை சென்றன - (அடுத்தடுத்துப்) பக்கத்தில் (உடன்) நில்லாதனவாய்த் திசைகளிற் சிதறிச் சென்றன; கரிபொன்றின; பரிமங்கின கவி சிந்தின - (அவற்றால்) யானைகள் இறந்துபட்டன; குதிரைகள் பொலிவற்றழிந்தன; வானரங்கள் சிதறுண்டு இறந்தன; பொருசெம்புனல் கடல் போல் சொரிகின்றன - அலைகள் மறியும் செம்மை நிறம் வாய்ந்த குருதி வெள்ளம் கடல் போன்று வெளிப்படுவனவாயின; கொலையால் தொலைகின்றனர் - (இருதிறப்படைவீரர்களும்) கொலைத் தொழிலால் (உயிர் தொலைந்தனர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The blazing sharp cruel arrows went wheeling about, so that both armies fled;
- they did not stay close at hand but went off to the quarters; scattered,
- the elephants perished; the horses wasted; the monkeys were strewn about; like a sea
- poured the surging red flood; and they were destroyed in the slaughter.
What the poem says
The arrows of the two champions fly wide in every direction, and the armies on both sides flee from them.
Elephants and horses of the Rākṣasa army die, monkeys are scattered and killed, and blood pours out like a surging red sea. Warriors of both sides fall in the slaughter.