கம்பராமாயணம் 9099 · யுத்த 26.115

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

செரு ஒத்து இகல் அரக்கன் விடு விசிகம் - போரில் ஒத்துப்பொருகின்ற வலிமிக்க அரக்கனாகிய இந்திரசித்து ஏவிய அம்புகளுட்சில; நீர் ஒத்தன; நெருப்பு ஒத்தன; பொருப்பு ஒத்தன - நீரை ஒத்தன (சில) மலையை ஒத்தன; நிமிரும் கார்ஒத்தன, உரும்ஒத்தன; கடல் ஒத்தன - (சில) விசும்பில் உயர்ந்து செல்லும் மேகத்தை ஒத்தன; (சில) இடியை ஒத்தன; (சில) கடலை ஒத்தன; கதிரோன் தேர் ஒத்தன; விடை மேலவன் சிரிப்பு ஒத்தன; உலகின் வேர் ஒத்தன - (சில) கதிரவனது தேரை ஒத்தன (சில) இடபத்தின் மேலமர்ந்தவனாகிய சிவனது சிரிப்பினை ஒத்தன; (சில) உலகத்தின் வேரை ஒத்தன.

இவற்றை ஜலமுகாஸ்திரம், அக்கினியாஸ்திரம், பர்வதாஸ்திரம், மேகாஸ்திரம், இடியாஸ்திரம், சமுத்திராஸ்திரம், சூரியாஸ்திரம், சிவபிரானின் பஞ்ச முகாஸ்திரம், மேருமுகாஸ்திரம் எனவும் கூறுவர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They were like water; like fire; like mountains; like the rising
  2. clouds; like thunder; like the sea; like the chariot
  3. of the sun; like the laughter of him who rides the bull; like the root
  4. of the world — the arrows shot by the hostile Rākṣasa, matching him in battle.

What the poem says

Now the poet describes Intiracittu's arrows, which match Ilakkuvaṉ's. Some are like water, some like fire, mountains, towering clouds, thunder or the ocean. Others are like the sun's chariot, like the laughter of Civaṉ, who rides the bull and burned the three cities with a laugh, or like the very root of the world.

The commentary notes that these are said to stand for divine weapons named after water, fire, mountain, cloud, thunder, ocean, sun, Civaṉ's five-faced weapon and Mount Mēru.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nīr ottaṉa; neruppu ottaṉa; poruppu ottaṉa; nimirum
kār ottaṉa; urum ottaṉa; kaṭal ottaṉa; katirōṉ
tēr ottaṉa; viṭai mēlavaṉ cirippu ottaṉa; ulakiṉ
vēr ottaṉa; ceru ottu ikal arakkaṉ viṭu vicikam.