கம்பராமாயணம் 9102 · யுத்த 26.118
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இங்கு இவர் விடுகின்றன விசிகம் போகின்றன - இங்கு (இலக்குவன் இந்திரசித்து) இருவரும் செலுத்துகின்றனவாகிய அம்புகள் (விரைந்து) செல்கின்றன; உலகுவேகின்றன சுடர் வெந்தன - (அவற்றால் தாக்கப்பட்டு) உலகங்கள் வேவனவாயின, (சூரியன் சந்திரன் முதலிய) சுடர்கள் வெந்தன; இமையோர்களும் புலர்ந்தார் - தேவர்களும் வாட்டமுற்றவராய்; “இது ஆகின்றது ஒர் அழிகாலம் ஆம் அன்று” என அயிர்த்தார் - இது இப்பொழுது தோன்றியதோர் அழிவுகாலமாகிய ஊழியோ என்றும் அன்றோ என்றும் ஐயுற்றனர்; நாண் ஒலி செவி நுழையத் திசையானைகள் நோகின்றன - வில் நாணின் ஒலி கும்) செவியிலே நுழைதலால் திசை யானைகள் வருந்துவனவாயின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The worlds are burning; the arrows these two let fly here
- go on; the heavenly lights are scorched; even the gods withered;
- 'Is this the age of destruction coming on, or not?' they wondered;
- the elephants of the quarters are in pain as the sound of the bowstrings enters their ears.
What the poem says
The arrows of the two warriors set the worlds burning and scorch the sun and moon. The gods grow pale and ask one another whether this is the final destruction at the end of the age.
Even the great elephants believed to hold up the eight directions of the world suffer, as the twang of the bowstrings pierces their ears.