கம்பராமாயணம் 9103 · யுத்த 26.119
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நெடுவானகம் மீன் உக்கது சுடரும் வெயில் உக்கது - (இருவரும் எய்த அம்புகள் தாக்கினமையால்) நீண்ட வானகம் மீன்களை உகுத்தது; ஞாயிறு வெயிலை உகுத்தது; முழுவெண்மதி மான் உக்கது வானம் மழை உக்கது - கலை நிறைந்த வெள்ளிய மதியம் (தன் உடலிலுள்ள) மானை உகுத்தது; ஆகாயம் மேகத்தை உகுத்தது; குலமால் வரைதான் உக்கது தலை உக்கது - தொகுதியாகிய மலைகள் உதிர்ந்து பொடியாவதன் முன்னம் சிகரங்களை உகுத்தன; எவ்வுலகத்தினும் உளவாயின உயிரும் தகைசால் ஊன் உக்க - எல்லா உலகத்திலும் உள்ளனவாகிய உயிர்களும் அழகமைந்த உடம்பினைச் சிந்தின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The wide sky shed its stars; the sun shed its sunlight;
- the full white moon shed its deer; the sky shed its rain;
- the great mountains of the clan crumbled; their peaks fell away; and
- the living beings in every world shed their fine flesh.
What the poem says
The fury of the duel shakes the whole cosmos loose. Stars drop from the sky, the sun loses its light, and the full moon sheds the deer that Indian tradition sees in its markings, where English speakers see a man in the moon.
The sky lets fall its rain clouds, the great mountains lose their peaks and crumble, and creatures in every world lose their bodies.