கம்பராமாயணம் 9110 · யுத்த 26.126

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உள் ஆடிய உதிரம் புனல் கொழுந் தீ என ஒழுக,
தள்ளாடிய வடமேருவின் சலித்தான்; உடல் தரித்தான்;
தொள்ளாயிரம் கடும் போர்க் கணை துரந்தான்; அவை, சுடர் போய்
விள்ளா நெடுங் கவசத்து இடை நுழையாது உக, வெகுண்டான்.

பொருள் · Meaning in Tamil

உள் ஆடிய உதிரப் புனல் கொழுந்தீ என ஒழுக - (இலக்குவன் எய்த அம்பினால்) உடம்பினுள்ளே ஓடிக்கொண்டிருக்கும் குருதி நீர் கொழுவிய தீத்திரள் போன்று வெளிப்பட்டு ஒழுக; தள்ளாடிய வடமேருவின் சலித்தான்; உடல் தரித்தான் - அசைவுற்ற வடதிசைக் கண்ணதாகிய மேருமலையினைப் போன்று நிலைகுலைந்தவனாகிய இந்திரசித்து (தன்) உடம்பினைத் தளர்வுறாதபடி பொறுத்தவனாகி, தொள்ளாயிரம் கடும் போர்க்கணை துரந்தான் அவை துறைபோய் - தொள்ளாயிரம் கொடிய போர் அம்புகளை (இலக்குவன் மேல்) செலுத்தினான்; அந்த அம்புகள் தமது இலக்கை அடைந்து; விள்ளா நெடுங்கவசத்திடை நுழையாது உக, வெகுண்டான் - பிளக்கமுடியாது நீண்ட (இலக்குவனது) கவசத்தினுள்ளே நுழையவியலாது உதிர்ந்தனவாக (அது கண்டு இந்திரசித்து) சினமுற்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the blood stirring within flowed out like a thick blaze of fire,
  2. he was shaken like the northern Mēru tottering; he held his body firm;
  3. he let fly nine hundred fierce battle-arrows; they reached their mark
  4. but could not enter the long unbreakable armour and fell away; he was enraged.

What the poem says

Blood pours from Intiracittu's wounds like flame, and he sways like Mount Mēru, the great mountain of the north, rocking on its base. Still he holds himself upright.

He fires nine hundred deadly arrows at Ilakkuvaṉ. They hit, but cannot pierce his long, unbreakable armour and drop away harmlessly, which only makes Intiracittu angrier.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uḷ āṭiya utirap puṉal koḻun tī eṉa oḻuka,
taḷḷāṭiya vaṭa mēruviṉ calittāṉ; uṭal tarittāṉ;
toḷḷāyiram kaṭum pōrk kaṇai turantāṉ; avai, tuṟai pōy
viḷḷā neṭuṅ kavacattiṭai nuḻaiyātu uka, vekuṇṭāṉ.