கம்பராமாயணம் 9111 · யுத்த 26.127

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மறித்து ஆயிரம் வடிவெங்கணை, மருமத்தினை மதியாக்
குறித்து, ஆயிரம் பரித்தேரவன் விடுத்தான்; அவை குறி பார்த்து
இறுத்தான், நெடுஞ் சரத்தால், ஒரு தனி நாயகற்கு இளையோன்;
செறித்தான் உடல் சில பொன் கணை, சிலை நாண் அறத் தெரித்தான்.

பொருள் · Meaning in Tamil

ஆயிரம் பரித்தேரவன் மறித்து ஆயிரம் வடிவெங்கணை - ஆயிரம் குதிரைகள் பூட்டிய தேரின் மேலானாகிய இந்திரசித்து, மீண்டும் ஆயிரம் வெம்மைமிக்க அம்புகளை; மருமத்தினை மதியாக் குறித்து விடுத்தான் - (இலக்குவனது) மார்பினை இலக்காக மதித்துக் குறிபார்த்து செலுத்தினான்; ஒரு தனி நாயகற்கு இளையோன் அவை குறிபார்த்து நெடுஞ்சரத்தால் இறுத்தான் - ஒப்பற்றதனி முதல்வனாகிய இராமனுக்கு இளையவனான இலக்குவன் அந்த அம்புகளைக் குறிபார்த்து முறித்துத் தள்ளினான்; பொற்கணை சில உடல் செறித்தான் சிலை நாண் அறத் தெறித்தான் - பொன்மயமான சில அம்புகளை தெரிந்து எடுத்துக் கொண்டவனாகி, (இந்திரசித்தின்) வில்லின் நாண் அறும்படி அவனது உடம்பில் நெருங்கச் செலுத்தினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Again a thousand sharp cruel arrows, aiming at the chest,
  2. taking it as his target, he of the thousand-horse chariot let fly; marking them,
  3. the younger brother of the one peerless lord broke them with his long arrows;
  4. he packed some golden arrows into the other's body and snapped his bowstring.

What the poem says

Intiracittu, riding his chariot drawn by a thousand horses, aims a thousand more arrows at Ilakkuvaṉ's chest.

Ilakkuvaṉ, younger brother of Irāmaṉ the one peerless lord, picks them off with his own long arrows and breaks every one. Then he fires a few golden arrows that sink into Intiracittu's body and cut through his bowstring.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṟittu āyiram vaṭi veṅ kaṇai, marumattiṉai matiyāk
kuṟittu, āyiram parit tēravaṉ viṭuttāṉ; avai kuṟi pārttu
iṟuttāṉ, neṭuñ carattāl, oru taṉi nāyakaṟku iḷaiyōṉ;
ceṟittāṉ uṭal cila poṟ kaṇai, cilai nāṇ aṟat teṟittāṉ.