கம்பராமாயணம் 9112 · யுத்த 26.128

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'வில் இங்கு இது நெடுமால் சிவன் எனும் மேலவர் தனுவே
கொல்? 'என்று கொண்டு அயிர்த்தான்; நெடுங் கவசத்தையும் குலையாச்
செல்லுங் கடுங்கணை யாவையும் சிதையாமையும் தெரிந்தான்;
வெல்லும்தரம் இல்லாமையும் அறிந்தான், அகம் மெலிந்தான்.

பொருள் · Meaning in Tamil

வில் இங்கு இது நெடுமால் சிவன் எனும் மேலவர் தனுவே கொல் - இங்கு (இலக்குவன் பிடித்துள்ள) வில்லாகிய இது நெடிய திருமால், சிவன் எனப் போற்றப் பெறும் மேலோராகிய பெருந்தெய்வங்களின் வில் தானோ? என்று கொண்டு அயிர்த்தான் - என்று எண்ணி (இந்திரசித்து) ஐயுற்றான்; நெடுங்கவசத்தையும் குலையாச் செல்லுங் கொடுங்கணை - நீண்ட கவசத்தையும் குலைத்து (ஊடுருவிச் செல்லும் (இலக்குவனுடைய) அம்புகள்; யாவையும் சிதையாமையும் தெரிந்தான் - எல்லாமும் சிதைவுறாத தன்மையையும் அறிந்தான்; வெல்லும் தரம் இல்லாமையும் அறிந்தான் அகம் மெலிந்தான் - (அவனை வெற்றி கொள்ளுந்திறம் (தனக்கு) இல்லாமையையும் அறிந்தவனாகி உளம் தளர்ந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'This bow here — is it the bow of the high ones,
  2. tall Tirumāl or Civaṉ?' he wondered; he saw that all the cruel arrows
  3. that went shattering even his long armour were never themselves shattered;
  4. he knew too that he had not the measure to win, and his heart grew faint.

What the poem says

For the first time Intiracittu begins to doubt. He wonders whether the bow Ilakkuvaṉ holds is really the divine bow of Tirumāl or of Civaṉ.

He sees that Ilakkuvaṉ's arrows break through even his own long armour without being damaged themselves, and he realises that he lacks the strength to win. His courage starts to fail.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vil iṅku itu neṭu māl civaṉ eṉum mēlavar taṉuvē
kol? 'eṉṟu koṇṭu ayirttāṉ; neṭuṅ kavacattaiyum kulaiyāc
celluṅ koṭuṅ kaṇai yāvaiyum citaiyāmaiyum terintāṉ;
vellum taram illāmaiyum aṟintāṉ, akam melintāṉ.