கம்பராமாயணம் 9113 · யுத்த 26.129
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அவன் சிறுதாதையும் அத்தன்மையை அறிந்தான் அணுகா - (இந்திரசித்து என்னும்) அவனது சிறியதந்தையாகிய வீடணனும் (இந்திரசித்து மனம் மெலிவுற்ற) அத்தன்மையினை அறிந்தவனாகி அணுகிவந்து; முத்தன் முகம் நோக்கா, 'ஒரு மொழிகேள்' என மொழிவான் - (பாசங்களின்று) விடுபட்ட தூயோனாகிய இலக்குவனின் முகத்தைப் பார்த்து “(யான்கூறும்) ஒரு வார்த்தையைக் கேட்பாயாக” என்று மொழிபவன்; “எத்தன்மையும் இமையோர்களை வென்றான் இகல் கண்டால் - “எல்லாத் திறத்தாலும் தேவர்களை வென்றவனாகிய இந்திரசித்தனின் (இப்போதைய) போர் புரியும் தன்மையைக் கண்டால்; பித்தன் மனம் தளர்ந்தான் இனி பிழையான்” எனப்பகர்ந்தான் - போர்ப்பித்துக் கொண்டவன் மனம் தளர்ந்து விட்டான் (ஆதலால்) இனிப்பிழைக்க மாட்டான்” என்று கூறினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- His uncle too saw how it was, and drawing near,
- looking into the face of the pure one, began, 'Hear one word':
- 'If you look at the fighting of him who conquered the gods in every way —
- the madman's heart has failed; he will not escape now,' he said.
What the poem says
Vīṭaṇaṉ, Intiracittu's uncle, notices that his nephew's spirit is breaking. He comes up to Ilakkuvaṉ, called 'the pure one', free from worldly bonds, and asks him to listen.
The one who once defeated all the gods is now fighting half-heartedly, Vīṭaṇaṉ says; this battle-mad warrior has lost heart, and he will not survive.