கம்பராமாயணம் 9114 · யுத்த 26.130
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கூற்றின் படி கொதிக்கின்ற அக்கொலைவாள் எயிற்று அரக்கன் - (உயிர் கொள்ளும்) கூற்றுவனது தன்மையினை ஒத்து (சினத்தால்) கொதிப்புற்று எழுகின்ற அந்தக் கொல்லுந்தன்மையதாகிய வாட்படையினையும் (கோரப்) பற்களையும் உடைய அரக்கனாகிய இந்திரசித்து; ஏற்றும் சிலை நெடுநாண் ஒலி உலகு ஏழினும் எய்த - (தன்) வில்லில் ஏற்றிய நாணின் ஓசை ஏழுலகங்களிலும் சென்றடைய; சீற்றம் தலைத்தலை சென்று உற, “இது தீர்” எனத் தெரியா - கோபமானது மேன்மேற் கிளர்ந்தெழ (அம்புகளில் வன்மை உடையதனை) தெரிந்தெடுத்து “இதனை விலக்கி அழிப்பாயாக” என்று கூறி; காற்றின் படை தொடுத்தான் அவன் அதுவே கொடு தடுத்தான் - வாயு தேவனுடைய படைக்கலத்தினை (இலக்குவன் மேல்) தொடுத்து விட்டான் (இலக்குவனாகிய) அவன் (அவ்வாயுதேவன் படைக்கலமாகிய) அதனையே கொண்டு தடுத்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The Rākṣasa with the killing sword and teeth, seething like Death,
- so that the sound of the long string strung on his bow reached all seven worlds,
- his anger mounting higher and higher, chose one, saying, 'Ward this off!',
- and fitted the weapon of the wind; the other warded it off with that same weapon.
What the poem says
Now the duel turns to divine weapons, the astras, each charged with the power of a god. Intiracittu, raging like Death himself, restrings his bow with a twang heard in all seven worlds.
He chooses the weapon of Vāyu, the wind god, and dares Ilakkuvaṉ to stop it. Ilakkuvaṉ counters it with the same wind weapon.