கம்பராமாயணம் 9115 · யுத்த 26.131

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அனலின் படை தொடுத்தான் அவன் அதுவே கொடுதடுத்தான் - (இந்திரசித்து) அங்கியந் தெய்வத்தினுடைய படையைத் தொடுத்து விட்டான்; அவ் இலக்குவன் அந்தப் படையினைக் கொண்டே (அதனைத்) தடுத்தான்; புனலின் படை தொடுத்தான், அவன் அதுவே கொடு பொறுத்தான் - (இந்திரசித்து) வருண தேவனுடைய படையைச் செலுத்தினான்; அவ்இலக்குவன் அந்தப் படையினைக் கொண்டே (அதனைத் தடுத்தான்; மனம் கரியான் கனல் வெங்கதிரவன் வெம்படை துரந்தான் - நெஞ்சங்கரியோனாகிய இந்திரசித்து அழன்று வீசும் வெம்மையான கதிர்களை உடைய சூரியனது படைக் கலத்தைச் செலுத்தினான்; சினவெந்திறல் இளங்கோளரி அதுவே கொடு தீர்த்தான் - வெகுளியும் கடுந்திறலும் உடைய இளம் சிங்கம் போல்பவனாகிய இலக்குவன் அச்சூரியனுடைய படையினையே கொண்டு அதனை அழித்துப் போக்கினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He fitted the weapon of fire; the other stopped it with that same one;
  2. he fitted the weapon of water; the other withstood it with that same one;
  3. the black-hearted one let fly the cruel weapon of the blazing hot sun;
  4. the young lion of fierce, hot might did away with it by that same one.

What the poem says

The exchange of divine weapons continues. Intiracittu uses the weapon of Akkiṉi, god of fire, then that of Varuṇaṉ, god of the waters, then that of the blazing sun.

Each time Ilakkuvaṉ neutralises the attack with the very same weapon. The repeated phrase 'with that same one' gives the verse the rhythm of an even match.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉaliṉ paṭai toṭuttāṉ; avaṉ atuvē koṭu taṭuttāṉ;
puṉaliṉ paṭai toṭuttāṉ; avaṉ atuvē koṭu poṟuttāṉ;
kaṉal veṅ katiravaṉ vem paṭai turantāṉ, maṉam kariyāṉ;
ciṉa ven tiṟal iḷaṅ kōḷari atuvē koṭu tīrttāṉ.