கம்பராமாயணம் 9116 · யுத்த 26.132
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“இது காத்திகொல்?” என்னா, எடுத்து, இசிகப்படை எய்தான் - (இலக்குவனை நோக்கி) “இதனைத் தடுக்கவல்லாயோ?” என்று சொல்லி இசிகப்படையை எடுத்து ஏற்றினான் (இந்திரசித்து); அது காப்பதற்கு அதுவே உளது என்னா தொடுத்து அமைந்தான் - அதனை(த் தடுத்துக் காப்பதற்கு அதுவே தக்கதாக உள்ளது என்று (அவ் இசிகப் படையினைத் தடுத்து அமைந்தான் (இலக்குவன்); செதுகாப்படை தொடுப்பேன் என நினைந்தான் - (உயிர்கொள்வதில்) தப்பாத படையினைத் தொடுத்து எய்வேன் என எண்ணியவனாகிய இந்திரசித்து; “இனி முடிந்தாய்” என மொழிந்தான் - (இலக்குவனைப் பார்த்து) “நீ இறந்தொழிவாய்” என்று சொல்லி; திசை முகத்தோன் முது மாப்படை துரந்தான் - நான்முகனது தொன்மையும் பெருமையும் வாய்ந்த (பிரம்மாத்திரம் என்னும்) படைக்கலத்தினை (இலக்குவன் மேற்) செலுத்தினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Can you ward this off?' he said, and took up and shot the weapon of Icikam;
- saying, 'To ward it off, there is only the same,' the other fitted that and was done;
- thinking, 'I will fit a weapon that never fails,' he let fly the ancient great weapon
- of the four-faced god, saying, 'Now you are finished.'
What the poem says
Intiracittu next launches the Icikam weapon, daring Ilakkuvaṉ to stop it, and Ilakkuvaṉ counters it with the same weapon.
Now Intiracittu resolves to use a weapon that never fails to take a life: the ancient and mighty weapon of Piramaṉ, the four-faced creator, known as the Brahmāstra. Releasing it, he tells Ilakkuvaṉ that he is finished.