கம்பராமாயணம் 9117 · யுத்த 26.133

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வானின்தலை நின்றார்களும் மழுவாளியும், மலரோன்
தானும், முனிவரரும், பிற தவத்தோர்களும், அறத்தோர்
கோனும், பிறபிற தேவர்கள் குழுவும், மனம் குலைந்தார்;
'ஊனம், இனி இலது ஆகுக இளங்கோக்கு 'என உரைத்தார்.

பொருள் · Meaning in Tamil

வானின் தலை நிலைநின்றவர் மழுவாளியும் மலரோன் தானும் - வானிடத்தே நிலையாக நின்றவர்களான மழுவென்னும் படையினை உடைய சிவபெருமானும், மலராசனத்தானாகிய பிரமதேவனும்; முனிவரும், பிறதவத்தோர்களும் அறத்தோர் கோனும் - முனிவர்களும் (அவர்களல்லாது) வேறு தவம்புரிவோர்களும் அறத்தை உடையவராய தேவர்களுக்குத் தலைவனாகிய இந்திரனும்; பிற பிற தேவர்கள் குழுவும் மனம் குலைந்தார் - ஏனைய தேவர் கூட்டத்தினரும் மனம் நடுங்கியவர்களாகி, “இளங்கோக்கு, ஊனம், இனி இலது ஆகுக” என உரைத்தார் - 'இளவரசனாகிய இலக்குவனுக்கு எத்தகைய தீங்கும் இனி இல்லாதொழிக' என்று கூறினார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Those who stood fixed at the top of the sky — he who bears the axe, and he of the flower
  2. himself, the great sages and the other ascetics, the king
  3. of the righteous, and the throng of all the other gods — their hearts were shaken;
  4. 'Now let no harm come to the young prince,' they said.

What the poem says

As the Brahmāstra flies, all the powers of heaven watch in fear: Civaṉ, who carries the battle-axe, Piramaṉ, seated on the lotus, the sages and ascetics, Intiraṉ, king of the righteous gods, and all the other gods.

With one voice they pray that no harm may come to young Ilakkuvaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāṉiṉtalai nilainiṉṟavar maḻuvāḷiyum, malarōṉ
tāṉum, muṉivararum, piṟa tavattōrkaḷum, aṟattōr
kōṉum, piṟa piṟa tēvarkaḷ kuḻuvum, maṉam kulaintār;
'ūṉam, iṉi ilatu ākuka iḷaṅkōkku 'eṉa uraittār.