கம்பராமாயணம் 9118 · யுத்த 26.134
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆழித்தனி முதல் நாயகற்கு இளையான் - சக்கரப்படையினை உடைய ஒப்பற்ற இறைவனாகிய இராமபிரானுக்குத் தம்பியாகிய இலக்குவன்; ஊழிக்கடை இறும் அத்தலை உலகுயாவையும் உண்ணும் - (யாவையும்) அழிந்தொழியும் இறுதிக் காலமாகிய ஊழி முடிவில் உலகம் எல்லாவற்றையும் பற்றி அழிக்கும்; ஆழிப் பெருங்கனல் தன்னொரு சுடர் என்னவும் ஆகாப் - கடல் நடுவே உள்ள வடவைப் பெருந்தீயானது, தன்னுடைய ஒரு சுடரினை ஒக்கும் என்று உவமைகூறுதற்கும் ஆகாத; பாழிச் சிகை பரப்பித் தனிபடர்கின்றது பார்த்தான், அது மதித்தான் - வலியதீக் கொழுந்துகளைப் பரப்பிக்கொண்டு (தன்னை நோக்கித்) தனித்து வருகின்ற பிரமாத்திரத்தைப் பார்த்தான்; அதன் இயல்பினை (உள்ளவாறு) எண்ணி அறிந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Spreading mighty flames such that even the great fire in the ocean,
- which at the very end of the last age devours all the worlds,
- could not be called a single spark of it, it came on alone; he saw it,
- the younger brother of the one first lord of the discus, and weighed it.
What the poem says
Ilakkuvaṉ, younger brother of Irāmaṉ, here called the lord of the discus as an incarnation of Tirumāl, watches the Brahmāstra speed towards him.
Its flames are so fierce that the submarine fire, which is said to lie hidden in the ocean and to swallow the worlds at the end of time, would not equal even one spark of it. Ilakkuvaṉ calmly weighs up what kind of weapon it is.