கம்பராமாயணம் 9119 · யுத்த 26.135
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“முதற்போது தன் வலத்தால் இவன் மலரோன்படை மீட்டான் அலன் - (நான் பிரமாத்திரத்தினை ஏவிய) முதற்பொழுதில் (இவன் தன் வலிமையினால் பிரமாத்திரத்தைத் தன்பால் வாங்கிக் கொண்டானல்லன்; தடுத்தான் அலன் மாட்டான் முடிந்தான்” என விட்டான் - (தன்பால் வராது) தடுத்தானும் அல்லன்; (எனவே, இப்பொழுதும் இதனை எதிர்த்து நிற்க) மாட்டாதவன் (ஆதலால்) இறந்தொழிந்தான்' என்று எண்ணி (இந்திர சித்து என்மேல் பிரமாத்திரத்தைச் செலுத்தினான்; “காட்டாது இனிக்கரந்தால், அது கருமம் அலது” என்னா - (எனது வன்மையைக்) காட்டாது மறைத்துக் கொண்டால் அது செய்யத்தக்க செயலாகாது என்று கருதி; “தாள் தாமரை மலரோன்படை தொடுப்பேன்” எனச் சமைந்தான் - தண்டினையுடைய தாமரைமலரில் அமர்ந்த பிரமனது படையினை (இவ் இந்திரசித்தின் மேல்) செலுத்துவேன் என்று (இலக்குவன் அப்படையினைச் செலுத்துதற்கு அமைந்தனன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'He could not; the first time, he did not turn back the flower-born one's weapon
- by his own strength; he did not stop it; he is finished' — thinking so, he let it fly;
- 'If I now hide my strength and do not show it, that is not right,' he thought,
- and he made ready, saying, 'I will fit the weapon of him of the stemmed lotus.'
What the poem says
Ilakkuvaṉ reads his enemy's mind. In an earlier battle Intiracittu had struck him down with this same Brahmāstra, and he had neither turned it back nor blocked it. So Intiracittu assumes he is helpless against it now.
Ilakkuvaṉ decides that it would be wrong to keep his own power hidden any longer. He prepares to answer with the same weapon of Piramaṉ, who sits on the long-stemmed lotus.