கம்பராமாயணம் 9121 · யுத்த 26.137

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தான் விட்டது மலரோன்படை எனின் மற்று இடை தருமே? - இலக்குவன் ஏவியது பிரம்மாத்திரம் என்றால் அது (பகைவர் படையினை எதிர்த்துச் செல்வதன்றிப்) பின்னிடக்கூடியதோ? வான் விட்டதும், மண்விட்டதும் மறவோன் உடல் அறுமே? - (அவன் பணித்த வண்ணம் அது) வானுலகத்தை (அழிக்காமல்) விட்டது, மண்ணுலகத்தை (அழிக்காமல்) விட்டது, (அதனால் இந்திரசித்தை அவன் கொல்ல எண்ணி இருப்பின்) வீரனாகிய இந்திரசித்தின் உடம்பு அறுபட்டு அழிந்திருக்கும்; “தேன்விட்டிடு மலரோன் படை தீர்ப்பாய்” எனத் தெரிந்தான் - “தேனினைச் சொரியும் தாமரை மலரிடத்தோனாகிய பிரமனுக்குரிய பிரமாத்திரத்தை மட்டும் அழித்தொழிப்பாய்” என்று அறிந்து செலுத்தினான்; “ஊன் விட்டவன் மறம் விட்டிலன்” என, வானவர் உவந்தார் - “குற்றத்தைக் களைந்தவனாகிய இலக்குவன் (தனக்கே உரிய) வீரத்திறனை விட்டு நீங்கினானல்லன்” என்று தேவர்கள் உவந்து பாராட்டினர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. If what he let fly was the flower-born one's weapon, would it give way?
  2. It spared the sky and spared the earth; the warrior's body would have been cut apart,
  3. but he chose with care: 'Undo only the weapon of the honey-dripping flower's lord';
  4. 'He who has cast off all fault has not cast off his valour,' the gods said in delight.

What the poem says

The poet stresses Ilakkuvaṉ's restraint. A Brahmāstra never gives way, and if he had willed it, Intiracittu's body would have been cut to pieces. Instead, as instructed, the weapon spares heaven and earth and seeks only to cancel the enemy's weapon.

The gods rejoice that the faultless prince has lost none of his courage even while showing such mercy.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'tāṉ viṭṭatu malarōṉ paṭai eṉiṉ, maṟṟu iṭaitarumē?
vāṉ viṭṭatum, maṇ viṭṭatum, maṟavōṉ uṭal aṟumē,
'tēṉ viṭṭiṭu malarōṉ paṭai tīrppāy 'eṉat terintāṉ;
'ūṉ viṭṭavaṉ maṟam viṭṭilaṉ' eṉa, vāṉavar uvantār.