கம்பராமாயணம் 9122 · யுத்த 26.138

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உருமேறு வந்து எதிர்ந்தால், அதன் எதிரே நெருப்பு உய்த்தால்,
வரும் ஆங்கது தவிர்ந்தால் என, மறவோன் படை மாய,
திருமால் தனக்கு இளையான் படை உலகு ஏழையும் தீய்க்கும்
அருமாகனல் எனநின்றது, விசும்பு எங்கணும் ஆகி.

பொருள் · Meaning in Tamil

உரும் ஏறு வந்து எதிர்த்தால், அதன் எதிரே, நெருப்பு உய்த்தால் - பேரிடி வந்து எதிர்த்தால் அதன் எதிராகத் தீத்திரளைச் செலுத்தினால்; வரும் ஆங்கது தவிர்ந்தாலென மலரோன்படை மாய - எதிர் வரும் அந்த நெருப்பு (இடியாற்) சிதைந்தழிந்தாற் போன்று, (இந்திரசித்தன் ஏவிய) பிரம்மாத்திரம் சிதைந்தழிய; திருமால் தனக்கு இளையோன் படை - திருமாலின் அவதாரமாகிய இராமபிரானுக்குத் தம்பியாகிய இலக்குவன் செலுத்திய பிரம்மாத்திரம்; உலகு ஏழையும் தீய்க்கும் அருமாகனல் என விசும்பு எங்கணும் ஆகி நின்றது - ஏழு உலகங்களையும் சுட்டெரிக்கும் அணுகுதற்கரிய (ஊழிக்காலத்துப்) பெருந்தீ என்னும் படி ஆகாய மெங்கும் பரவி நின்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As when a thunderbolt comes on to meet one, and fire is sent against it,
  2. the fire that comes is put out there — so the flower-born one's weapon perished;
  3. and the weapon of the younger brother of Tirumāl, like a fearsome great fire
  4. that would burn all seven worlds, stood filling the whole sky.

What the poem says

The two Brahmāstras meet. Intiracittu's weapon is snuffed out as fire is overwhelmed by a thunderbolt.

The weapon sent by Ilakkuvaṉ, younger brother of Irāmaṉ, who is Tirumāl in human form, remains, blazing across the whole sky like the fire that burns up the seven worlds at the end of an age. Its power is still dangerous and must be brought under control.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1urum ēṟu vantu etirttāl, ataṉ etirē neruppu uyttāl,
varum āṅkatu tavirntāleṉa, malarōṉ paṭai māya,
tirumāltaṉakku iḷaiyāṉ paṭai ulaku ēḻaiyum tīykkum
aru mā kaṉal eṉa niṉṟatu, vicumpu eṅkaṇum āki.