கம்பராமாயணம் 9123 · யுத்த 26.139
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பகலோன் குல மருமான் அங்கு படை அது படராவகை - சூரிய குலத்தோன்றலாகிய இலக்குவன், அங்கு (த் தன்னால் ஏவப் பட்ட) பிரமாத்திரம் (வானத்திற்) பரவிச் செல்லாதபடி; அது தடுக்கும் படி தொடை ஒன்றினை - அதன் வன்மையைத் தடுத்துக் குறைத்தற்பொருட்டுத் தொடுக்கப் படுவதாய அம்பு ஒன்றினை; “கணைமீமிசைத் துறுவாய் இனி” என்றான் - (பிரமாத்திரமாகிய) “அம்பின் மீது இனி நெருங்கிச் செல்வாயாக” என்று கூறியவனாகி; இடை ஒன்று செந்தீ உக எய்தான் - அதனிடையே மற்றோரம்பினைச் சிவந்த தீப்பொறி சிதற ஏவினான்; விடம் ஒன்று கொண்டு ஒன்று ஈர்ந்தது போல் தீர்ந்தது வேகம் - (அதனால்) ஒரு நஞ்சினைக் கொண்டு மற்றொரு நஞ்சு ஈர்க்கப்பட்டுத் தன் வலி கெட்டழிந்தாற் போன்று (பிரம்மாத்திரமாகிய) அதன் வேகம் தீர்ந்தொழிந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So that that weapon should not spread there, the scion of the Sun's line
- shot one arrow in between to check it, so that red fire spilled out —
- one shaft, saying, 'Now press close upon that arrow';
- and its force was spent, as when one poison is drawn off by another.
What the poem says
Ilakkuvaṉ, a prince of the Solar dynasty, does not let his own Brahmāstra spread across the sky and do harm. He shoots one more arrow, throwing off red sparks, and commands it to close in on the great weapon and check it.
The Brahmāstra's force dies away, just as one poison can be used to draw out and cancel another.