கம்பராமாயணம் 9124 · யுத்த 26.140

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

விண்ணோர் அது கண்டார் - தேவர்கள் (இலக்குவன் செய்த அச்செயலைக் கண்டார்கள்; “வயவீரர்க்கு இனி மேன்மேல் ஒண்ணாதன உளவோ?” என - “வன்மை மிக்க பெரு வீரராகிய இராம இலக்குவர்கட்குச் செய்து முடிக்க ஒண்ணாத (அரிய) செயல்களும் இனி உள்ளனவோ? என்று கூறி; மனம் தேறினர் உவந்தார் - (கவலை நீங்கி) மனம்தெளிந்தவர்களாய் மகிழ்ச்சியுற்றார்கள்; கண் ஆர் நுதல் பெருமான், “இவர்க்கு அரிதோ?” எனக்கடைபார்த்து - கண் பொருந்திய நெற்றியினை உடைய சிவபெருமான், 'இவ்வீரர்கட்கு (இது) செய்தற்கரியதோ?' என்று சொல்லிக் கடைக்கண்ணோக்கஞ் செய்து; “எண்ணாது இவை பகர்ந்தீர் பொருள் கேளீர்!” என இசைத்தான் - “எண்ணிப்பாராது இம்மொழிகளைக் கூறினீர்கள் (இவ்விருவருடைய பேராற்றலாகிய பொருளியல்பினை உள்ளவாறு கேட்பீராக என்று (பின் வருமாறு) கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The gods saw it, and saying, 'Is there anything left at all
  2. beyond the power of these mighty heroes?', their hearts were eased and they rejoiced;
  3. the lord with the eye in his brow glanced aside, saying, 'Is this hard for them?',
  4. and declared, 'You have said this without thinking; hear the truth of it!'

What the poem says

Seeing Ilakkuvaṉ neutralise the Brahmāstra, the gods are relieved and delighted, and they ask whether there is anything these heroes cannot do.

Civaṉ, who has a third eye in his forehead, glances at them sideways, half amused. Of course this is not hard for them, he says; the gods have spoken without understanding who they really are. In the next verses he reveals their divine identity.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viṇṇōr atu kaṇṭār, 'vaya vīrarkku iṉi mēṉmēl
oṇṇātaṉa uḷavō? 'eṉa maṉam tēṟiṉar, uvantār;
kaṇṇār nutal perumāṉ, 'ivarkku aritō? 'eṉak kaṭaipārttu,
'eṇṇātu ivai pakarntīr; poruḷ kēḷīr! 'eṉa icaittāṉ.