கம்பராமாயணம் 9126 · யுத்த 26.142

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அறிவும் தொடர்ந்து அணுகாப்புறத்தார் - அறிவும் தொடர்ந்து நெருங்க முடியாத (சிந்தைக்கு) அப்புறத்தே உள்ளாராகிய அவர்கள்; அறத்தாறு அழிவு உளதாம் என அது புரப்பார் - (உலகத்து) அறநெறி அழிவுக்குட்படுவதாயிற்று' என்று அதனை (நிலைநிறுத்து)க் காப்பவராய்; அகத்தார் எனப் புகுந்து பிறந்தார் - உலகத்தின் அகத்திலும் நீங்காது உள்ளார் என்னும் படி புகுந்து (இராமஇலக்குவர் எனப்) பிறந்தருளினர்; திறத்தால் அது தெரிந்து யாவரும் தெரியாவகை திரிவார் - (தமது அருளின்) திறத்தால் (அறத்தினைக் காத்தலாகிய) அம்முறையினை ஆராய்ந்து (பிறர்யார்க்கும் தமது இயல்பு) புலனாகாதவாறு சஞ்சரிப்பவர்களாகிய இவர்கள்; மறத்தார் குலம் முதல்வேர் அற மாய்ப்பான் இவண் வந்தார் - தீவினையாளர்களாகிய அரக்கர் குலத்தை அதன்மூலமாகிய வேருடன் அற்றுச் சிதைய அழித்தற் பொருட்டு (இலங்கையாகிய) இவ்விடத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.

“ஞானவான்களின் நுண்ணறிவாலும் தொடரவொண்ணாம் புறத்தார்களாகிய இவர்கள் உலகின் அகத்திலும் உள்ளாராமெனப் பிறந்து வந்துள்ளனர் உலகில் அறம் வீழ்கின்றது என்பதை உணர்ந்து அதனைக் காக்கும் பொருட்டுத் தமது அவதார ரகசியம் யார்க்கும் தெரியாத வண்ணம் சஞ்சரிப்பவராகி அரக்கர் குலத்தை வேருடன் அழிக்க இவண் வந்துள்ளனர்” என்றவாறு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Saying, "The way of dharma is perishing," they who stand beyond, where even wisdom
  2. cannot follow and reach, entered in and were born so as to be within, to protect it;
  3. to destroy the clan of the wicked root and all, they have come here;
  4. knowing that purpose by their power, they move about so that no one knows them.'

What the poem says

Civaṉ continues. Irāmaṉ and Ilakkuvaṉ are beyond the reach of even the subtlest understanding. Seeing that righteousness was collapsing in the world, they entered it and were born as men in order to protect it.

They keep the secret of their divine nature hidden from everyone as they go about their work, and they have come to Ilaṅkai to tear out the race of the Rākṣasas by the roots.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"aṟattāṟu aḻivu uḷatu ām" eṉa, aṟivum toṭarntu aṇukāp
puṟattār, pukuntu akattār eṉap piṟantār, atu purappār;
maṟattār kulam mutal vēr aṟa māyppāṉ, ivaṇ vantār;
tiṟattāl atu terintu, yāvarum teriyāvakai tirivār.