கம்பராமாயணம் 9127 · யுத்த 26.143

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

“உயிர்தோறும் உற்றுளன் தோத்திரத்து ஒருவன்” என உரைக்கும் - “உயிர்கள் தோறும் பொருந்தியுள்ளவனாகிப் போற்றுதற் பொருளாயுள்ள ஒப்பற்ற முதல்வன்” என்று உயர்த்திக் கூறப்படும்; அயிரா நிலை உடையான் இவன் - ஐயுறப்படாத இறை நிலையை உடையவன் (இலக்குவன் என்னும்) இவன் ஆவான்; அவன் இவ்வுலகு அனைத்தும் தயிர்தோய் பிரை எனல் ஆம் வகைகலந்து ஏறியதலைவன் - (இராமனாகிய) அவன், இவ்வுலகங்கள் எல்லாவற்றிலும் (பால்) தயிராதற்குரிய பிரைமோர் என்று சொல்லும் படி (நீக்கமறக்) கலந்து பரவி நின்ற தலைவன் ஆவான்; பயிராதது ஒர் பொருள் இன்னது என்று உணர்வீர்; இது பரமால் - (இன்னதன்மையது என்று) சொல்ல வொண்ணாத முழுமுதற்பொருள் இத்தன்மையதென்று உணர்வீராக. (நும்கண்ணுக்குப் புலனாகிய) இதுவே பரம் பொருளாகும்.

உயிர்க்குயிராய் உலகங்கள் எல்லாவற்றிலும் தயிர்தோய் பிரைஎனக் கலந்து ஒன்றாகியும் உள்ள முழுமுதற்பொருளே இராம இலக்குவர் என்னும் இருவராக அவதரித்துள்ளது என்பதாம். அயிராநிலை - ஐயுறப்படாத (தெய்வ) நிலை. பயிர்தல் - சொல்லுதல். பரம் - மேலானபொருள்; கடவுள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'This one has the undoubted state of him who is spoken of as "the One of the hymns,
  2. who dwells in every living thing"; that one is the lord who has mingled with
  3. all these worlds and pervades them, as the starter that sets milk into curd;
  4. know that this is the thing that cannot be named; this is the Supreme.'

What the poem says

Civaṉ concludes his revelation. Ilakkuvaṉ holds the unquestionable status of the One praised in the hymns, who lives in every soul. Irāmaṉ is the lord who pervades all the worlds completely, as the dash of starter culture spreads through milk and turns all of it into curd.

What the gods see before them, Civaṉ says, is the Supreme Being that no words can describe, born as the two brothers.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"uyirtōṟum uṟṟuḷaṉ, tōttirattu oruvaṉ" eṉa uraikkum
ayirā nilai uṭaiyāṉ ivaṉ; avaṉ, iv ulaku aṉaittum
tayir tōy pirai eṉal ām vakai kalantu, ēṟiya talaivaṉ;
payirātatu or poruḷ iṉṉatu eṉṟu uṇarvīr; itu paramāl.