கம்பராமாயணம் 9131 · யுத்த 26.147
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இமையோர் சிரத்து ஏந்திய கரத்தால் தமை சேமித்தனர் - தேவர்கள், தம் தலைமீது சுமந்து கைகளால் தம்மைப் பாதுகாத்துக் கொண்டனர்; ஆம் இத்தொழில் பிறர் யாவரும் அடைந்தார் - பொருந்திய இச்செயலையே (அங்குள்ள முனிவர் முதலிய) ஏனையோர் எல்லோரும் மேற்கொண்டனர்; பழுது அடையாக் காமிப்பது முடிவிப்பது படர்கின்றது கண்டான் - பழுதுறாவண்ணம் விரும்பியதனை நிறைவேற்றவல்லதாகிய அப்படைக்கலம் (தன்னைக் கைக்கூப்பித் தொழுவார் மேற் செல்லாது) நிலத்தில் படிந்து வருவதனைக் கண்ட இலக்குவன்; “நேமித்தனி அரி, தான்” என நினைந்தான் எதிர் நடந்தான் - ஒப்பற்ற சக்கரப்படையினை யேந்திய திருமாலே தான் என உணர்ந்தவனாகி (பாவித்துக்கொண்டு அப்படையின் எதிரே நடந்து சென்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The gods protected themselves with hands raised above their heads;
- all the others there took up this same course; seeing it come on,
- the weapon that never fails and fulfils whatever is desired,
- he thought, 'I myself am Hari, peerless with the discus,' and walked out to meet it.
What the poem says
Tradition holds that the Nārāyaṇāstra spares those who submit to it and folds their hands in worship. So the gods and sages all raise their joined hands above their heads to protect themselves.
Ilakkuvaṉ watches the unfailing weapon approach and, knowing himself to be one with Hari, Tirumāl who wields the discus, he walks straight towards it.