கம்பராமாயணம் 9134 · யுத்த 26.150
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அவன் அன்னது கண்டான் “இவன் ஆரோ?” என அயிர்த்தான் - இந்திரசித்து திருமால்படை பழுதானதைப் பார்த்தான்; இவ் இலக்குவன் யாரோ? என ஐயமுற்றான்; “இவன் அன்னது முதலே உடை இறையோன்” எனவியவா - “இலக்குவனாகிய இவன் அப்படையினைத் தொன்மையே கொண்டுள்ள (திருமாலாகிய) இறைவனே” என்று வியந்து; “எவன் என்னினும் நன்று ஆகுக! இனி எண்ணலென்” என்னா - “இவன் யாவன் ஆயினும் (எனது போர்ச்செயல்) நன்றாக நிறைவுறுக' இனி (வேறு எதனையும்) எண்ணுவேனல்லன்' என்று; “சிவன் நன்படை தொடுத்து, ஆர் உயிர் முடிப்பேன்” எனத் தெரிந்தான் - சிவனுடைய நல்ல (பாசுபதம்) படையினைத் தொடுத்து இவனது அரிய உயிரைப் போக்குவேன்' என்று தேர்ந்து துணிந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He saw how it went, and wondered, 'Who can this be?';
- marvelling, 'This is the lord who owned that weapon from the beginning,'
- he said, 'Whoever he may be, let it stand; I will think no more on it,'
- and resolved, 'I will fit Civaṉ's good weapon and end his precious life.'
What the poem says
Intiracittu sees his Nārāyaṇāstra fail and begins to wonder who Ilakkuvaṉ really is. He even guesses that this must be the very lord to whom the weapon has always belonged, Tirumāl himself.
Yet he pushes the thought aside. Whoever his enemy may be, he will not stop to think about it; he will try Civaṉ's own weapon, the Pāśupata, and with it take Ilakkuvaṉ's life.