கம்பராமாயணம் 9135 · யுத்த 26.151

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பார்ப்பான் தரும் உலகு யாவையும் ஒரு நாள் ஒருபகலே
தீர்ப்பான் படை தொடுப்பேன் ' எனத் தெரிந்தான்; அது தெரியா,
மீப் பாவிய இமையோர் குலம் வெரு உற்றது; 'இப்பொழுதே
மாய்ப்பான் 'என உலகு யாவையும் மறுகுற்றன, மயங்கா.

பொருள் · Meaning in Tamil

பார்ப்பான் தரும் உலகு யாவையும் ஒருகால் ஒருபகலே - வேதியனாகிய பிரமன் படைத்த உலகங்கள் எல்லாவற்றையும் ஒரு காலப்பகுதியின் ஒரு பொழுதுக்குள்; தீர்ப்பான் படை தொடுப்பேன் எனத் தெரிந்தான் - அழித்துத் தீர்ப்பவனாகிய பசுபதியின் படையை (இலக்குவன் மேல்) தொடுத்து விடுவேன் எனத்தெரிந்தெடுத்தான் (இந்திரசித்து); அது தெரியா மீப்பாவிய இமையோர் குலம் வெருவுற்றது - அதனைத் தெரிந்து ஆகாயத்தின் மேல் பரவி நின்ற தேவர்கூட்டம் அஞ்சி நடுங்கியது; “இப்பொழுதே மாய்ப்பான்” என உலகு யாவையும் மயங்கா மறுகுற்றன - “இவன் இப்பொழுதே அழித்தொழிப்பான்” என்று எல்லா உலகங்களும் மயங்கித் தடுமாற்றமடைந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'All the worlds the Brahmin creator brings forth, at one time, in a single day,
  2. he destroys — his weapon I will fit,' he resolved; knowing this,
  3. the host of gods spread across the sky was terrified; 'He will destroy us
  4. this very moment,' cried all the worlds, and were thrown into bewildered turmoil.

What the poem says

Intiracittu chooses the weapon of Civaṉ, the destroyer who at the end of time wipes out in a single day all the worlds that Piramaṉ, the Brahmin creator, has made.

The gods gathered across the sky know what this weapon can do and are terrified. All the worlds fall into panic, sure that it will destroy everything at once.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pārppāṉ tarum ulaku yāvaiyum oru kāl oru pakalē
tīrppāṉ paṭai toṭuppēṉ' eṉat terintāṉ; atu teriyā,
mīp pāviya imaiyōr kulam veruvuṟṟatu; 'ippoḻutē
māyppāṉ 'eṉa ulaku yāvaiyum maṟukuṟṟaṉa, mayaṅkā.