கம்பராமாயணம் 9138 · யுத்த 26.154

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சூலங்களும், மழுவும், சுடு கணையும், கனல் சுடரும்,
ஆலங்களும், அரவங்களும், அசனிக்குலம் எவையும்,
காலன்தனது உருவங்களும், கரும்பூதமும், பெரும் பேய்ச்
சாலங்களும் நிமிர்கின்றன, உலகு எங்கணும் தான் ஆய்.

பொருள் · Meaning in Tamil

சூலங்களும், மழுவும், சுடுகணையும் கனல் சுடரும் - அப்பொழுது அப்பாசுபதப் படையினின்றும்) சூலங்களும், மழுப்படைகளும், சுட்டெரிக்கும் அம்புகளும், கனன்றெரியும் தீச்சுடர்களும்; ஆலங்களும், அரவங்களும், அசனிக் குலம் எவையும் - நஞ்சுகளும், பாம்புகளும், இடித்தொகுதிகள் யாவையும்; காலன் தனது உருவங்களும் கரும் பூதமும் பெரும்பேய்ச் சாலங்களும் - இயமனுடைய வடிவங்களும் கரிய பூதங்களும் பெரிய பேய்க்கூட்டங்களும்; உலகு எங்கணும் தான் ஆம் நிமிர்கின்றன - உலகில் எவ்விடங்களிலும் ஆகி எழுந்து தோன்றுவனவாயின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Tridents and battle-axes, scorching arrows and blazing flames,
  2. poisons and serpents, every kind of thunderbolt,
  3. the forms of Death himself, black goblins and great hosts
  4. of ghouls rose up, filling the world everywhere.

What the poem says

As the Pāśupata weapon flies, all the terrors associated with Civaṉ pour out of it: tridents and battle-axes, burning arrows and flames, poisons and serpents, thunderbolts, the shapes of Yamaṉ the god of death, dark goblins and swarms of ghouls.

They seem to fill every part of the world.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cūlaṅkaḷum, maḻuvum, cuṭu kaṇaiyum, kaṉal cuṭarum,
ālaṅkaḷum, aravaṅkaḷum, acaṉik kulam evaiyum,
kālaṉ taṉatu uruvaṅkaḷum, karum pūtamum, perum pēyc
cālaṅkaḷum nimirkiṉṟaṉa, ulaku eṅkaṇum tāṉ ām.