கம்பராமாயணம் 9140 · யுத்த 26.156

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இரிந்தார் குலநெடுந் தேவர்கள்; இருடிக் குலத்து எவரும்
பரிந்தார். 'இதுபழுது ஆகிலது, இறுவான் எனும் பயத்தால்;
நெரிந்து ஆங்கு அழிகுரங்கு உற்றது பகருந்துணை நெடிதே.
திரிந்தார், இரு சுடரோர்; உலகு ஒரு மூன்று உடன் திரிய.

பொருள் · Meaning in Tamil

குலநெடுந்தேவர்கள் இரிந்தார் - சிறந்த பெருமை வாய்ந்த தேவர்கள் (பாசுபதப்படைகண்டு) அஞ்சி ஓடினார்கள்; இருடிக் குலத்து எவரும், “இது பழுது ஆகிலது; இறுவான்” எனும் பயத்தால் பரிந்தார் - முனிவர் கூட்டத்திலுள்ளார் யாவரும் “இப்படை (தன் இலக்கில்) தவறுபடாது; (எனவே இலக்குவன்) இறந்து படுவான்” என்னும் அச்சத்தால் வருத்தமுற்றார்கள்; ஆங்கு நெரிந்து அழி குரங்கு உற்றது பகரும் துணை நெடிதே? - அங்கு நெரிதலுற்று அழிந்த குரங்குகள் அடைந்த துயரம் சொல்லுங்கால் அவ்வுரை மிகவும் நீளும் தன்மையதே! இரு சுடரோடு ஒரு மூன்று உலகு உடன் திரிய திரிந்தார் - சூரிய சந்திரர்களான இரு சுடர்களோடு மூன்று உலகங்களும் ஒன்று சேர்ந்து திரிய (அங்குள்ளவர்கள்) அலைந்தார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The great gods of high lineage fled; all the race of sages
  2. grieved, in fear that 'This will not fail; he will die';
  3. what the monkeys suffered there, crushed and perishing, would take long to tell;
  4. they reeled about, as the three worlds reeled together with the two great lights.

What the poem says

Faced with the Pāśupata weapon, the gods flee and the sages grieve, convinced that it cannot miss and that Ilakkuvaṉ must die.

The poet says it would take too long to describe what the monkeys suffered as they were crushed and killed. Everyone on the field staggers about in confusion, as if the three worlds were spinning together with the sun and moon.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1irintār kula neṭun tēvarkaḷ; iruṭik kulattu evarum
parintār. 'itu paḻutu ākilatu, iṟuvāṉ eṉum payattāl;
nerintu āṅku aḻi kuraṅku uṟṟatu pakarum tuṇai neṭitē.
tirintār, iru cuṭarōṭu; ulaku oru mūṉṟu uṭaṉ tiriya.