கம்பராமாயணம் 9141 · யுத்த 26.157
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நெடுந்தகை வீடணன் பார்த்தான் உயிர் காலுற, பயத்தால் வேர்த்தான் - பெருந்தகையான வீடணன் (அப்படையின் கடுமையைக்) கண்டான்; பெருமூச்சு வெளிப்பட அச்சத்தால் (உடல் முழுவதும்) வேர்த்தவனாகி; “இது விலக்கும் தரம் உளதோ, முதல் வீரா! தீர்த்தா!” என அழைத்தான் - 'இப்படையினை விலக்கும் உபாயம் உளதோ? வீரர்க்கெல்லாம் முதல்வனே! தூயோனே!' என (இலக்குவனை நோக்கி) அழைத்து முறையிட்டான்; அதற்கு இளங்கோளரி சிரித்தான் - வீடணனது அச்சத்தைக் கண்ட இளஞ்சிங்கம் போன்றவனாகிய இலக்குவன் (இகழ்ச்சியுடன் நகைத்தான்; போர்த்தார் அடர் கவி வீரரும் அவன் தாள் நிழல் புகுந்தார் - போர் மாலை நெருங்கிய வானர வீரர்களும் அவ் இலக்குவனின் திருவடி நிழலிலே சரணடைந்தனர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The noble Vīṭaṇaṉ looked, his breath rushing out, and in his fear
- he sweated, and cried, 'Is there any way to ward this off, first of heroes,
- pure one?'; at that the young lion laughed;
- and the monkey warriors, crowded in their war-garlands, took shelter in the shade of his feet.
What the poem says
Vīṭaṇaṉ sees the Pāśupata coming. Gasping and sweating with fear, he begs Ilakkuvaṉ, the first of heroes, to say whether there is any way to stop it.
Ilakkuvaṉ only laughs at his fear. The monkey warriors, still wearing their battle garlands, crowd round and take refuge at his feet.