கம்பராமாயணம் 9142 · யுத்த 26.158
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“அவயம்! உனக்கு அவயம்!” எனும் அனைவோரையும் - 'உனக்கு அபயம், அபயம்' என்று சொல்லி முறையிடுகின்ற அனைவரையும்; “அஞ்சேல்! அவயம் உமக்கு அளித்தோம்” என, தன் கைத்தலத்து அமைத்தான் - (இலக்குவன் அருளால் நோக்கி) “அஞ்சற்க, உங்களுக்கு அபயம் அளித்தோம்” என்று தன் கைத்தலத்தால் அமைத்து ஆறுதல் கூறினான்; “உவயம் உறும் உலகின் பயம் உணர்ந்தேன், இனி ஒழியேன் - (மண்ணுலகும் விண்ணுலகும் என) இரண்டாகப் பொருந்திய உலகங்களின் அச்சத்தினை உணர்ந்து கொண்டேன், இனி(என் கடமையினின்றும்) நீங்கேன்; ஐம் முகம் உடையான் சிவன் படை தொடுப்பேன்” எனத் தெளிந்தான் - ஐந்து திருமுகங்களை உடைய சிவ பெருமானின் (பாசுபத) படையினைத் தொடுத்து விடுவேன் என்று (தன்மனத்தில்) தெளிந்து துணிந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- All those who cried, 'Refuge! We seek refuge in you!' —
- 'Fear not; we have given you refuge,' he said, and calmed them with his hand;
- 'I have understood the fear of the twofold world; I will not hold back now;
- I will fit the weapon of Civaṉ of the five faces,' he resolved.
What the poem says
All who crowd round crying out for protection are reassured by Ilakkuvaṉ. He raises his hand in the gesture of fearlessness and tells them not to be afraid, for he has granted them refuge.
Seeing the terror of both earth and heaven, he decides that he must act at once. He will meet the Pāśupata with the same weapon of Civaṉ, the god with five faces.