கம்பராமாயணம் 9145 · யுத்த 26.161
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இறுகாலையின் உலகு யாவையும் அவிப்பான் இகல் படையை - (ஊழிமுடிவில்) இறுதிக்காலத்தில் உலகங்கள் எல்லாவற்றையும் (ஒருசேர அழிப்பவனாகிய சிவபெருமானது ஆற்றல் மிக்க (பாசுபத) அத்திரத்தினை; மறுகாவகை வலித்தான் அது வாங்கும் படி வல்லான் - (வேறெங்கும்) திரியாதபடி வலித்து இழுத்தான்; அதனை (வலிதிற்) பற்றி வாங்குவதற்கு வல்லவனாகிய இலக்குவன்; தெறுகாலனின் கொடியோனும் மற்று அதுகண்டு அகம் திகைத்தான் - அழிக்குந்திறனுடைய கூற்றுவனை விடக்கொடியவனாகிய இந்திரசித்து (இலக்குவனது) அத்திறமை கண்டு மனம் திகைப்படைந்தான்; அறுகால் வயக் கவிவீரரும் அரி என்பதை அறிந்தார் - செயலற்ற கால்களை உடைய வலிமிக்கவானரவீரர்களும் (இலக்குவனாகிய அவன்) திருமாலே என்னும் மெய்மையை உணர்ந்தார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The mighty weapon of him who at the final hour puts out all the worlds
- he drew back so that it would not stray, he who had the power to withdraw it;
- even he who was crueller than destroying Death was stunned at heart to see it;
- and the mighty monkey warriors, their legs gone weak, knew that he was Hari.
What the poem says
Ilakkuvaṉ has the power not only to release the Pāśupata but to call it back. After it has done its work he recalls it, so that it does no further damage in the world.
Intiracittu, crueller than Death, is stunned at this mastery. The monkey warriors, weak-kneed with fear a moment ago, now understand that Ilakkuvaṉ is Hari, Tirumāl himself.