கம்பராமாயணம் 9146 · யுத்த 26.162

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

“தெய்வப்படை பழுது உற்றது எனக் கூசுதல் சிதைவால் - (என்னால் ஏவப்பட்ட) “தெய்வத்தன்மை வாய்ந்த அத்திரம் (இலக்குவனால்) பழுதுற்று அழிந்தது” என்று மனம் கூசி ஒடுங்குதல் (எனது வீரத்திற்குக்) குற்றமாகும்; எய்வித்தகம் உளது; அன்னது பிழையாது” என இசையா - (மேன்மேலும் அம்புகளை) எய்யும் தொழிலாகிய திறமை என்பால் (குறைவின்றி நிரம்பி) உள்ளது; அத்திறமை (என்றும்) தவறு படாது” என்று சொல்லி; கைவித்தகம் அதனால் சில கணை வித்தினன் - தன்கைத்திறமையால் சில அம்புகளைத் தூவினான்; அவையும் மொய்வித்தகன் தடந்தோளினும் நுதற் சூட்டினும் மூழ்க - அவ்அம்புகளும் வன்மை நிறைந்த சதுரப்பாடுடையவனாகிய இலக்குவனுடைய பெரிய தோள்களிலும் நெற்றியின் உச்சியிலும் அழுந்திப் பதியும்படி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'To shrink back because a divine weapon has failed would be a disgrace;
  2. I have the skill of shooting; that will not fail me,' he declared,
  3. and with the skill of his hands he sowed some arrows, so that they
  4. sank into the broad shoulders and the crown of the brow of that strong and skilful one.

What the poem says

Intiracittu refuses to be ashamed that his divine weapons have failed. To lose heart now would be a disgrace, he says; his own skill as an archer is still with him and will not let him down.

With pure skill of hand he fires a few arrows that sink deep into Ilakkuvaṉ's broad shoulders and forehead. The sentence runs on into the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'teyvap paṭai paḻutu uṟṟatu eṉak kūcutal citaivāl;
ey vittakam uḷatu; aṉṉatu piḻaiyātu 'eṉa icaiyā,
kai vittakam ataṉāl cila kaṇai vittiṉaṉ; avaiyum
moy vittakaṉ taṭan tōḷiṉum nutaṟ cūṭṭiṉum mūḻka.