கம்பராமாயணம் 9148 · யுத்த 26.164

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'முரண்தடம் தண்டும் ஏந்தி, மனிசரை முறைமை கூறிப்
பிரட்டரின் புகழ்ந்து, பேதை அடியரின் தொழுது பின்சென்று,
இரட்டுறும் முரசம் என்ன, இசைத்ததே இசைக்கின்றாய் ஐப்
புரட்டுவன் தலையை, இன்று; பழி என ஒழிவென் போலாம்.

பொருள் · Meaning in Tamil

முரண் தடந்தண்டும் ஏந்தி - வலிய பெரிய தண்டாயுதத்தைக் கையில் ஏந்தி; பிரட்டரின் மனிதரை முறையைக் குன்றிப் புகழ்ந்து - (சாதி) நெறியின் நீங்கினோரைப் போன்று மனிதர்களை முறைமை இல்லாமல் (உறவு முறை சொல்லிப்) புகழ்ந்து கூறி; பேதை அடியரின் தொழுது பின் சென்று - அறியாமையை உடைய அடிமைகளைப் போன்று (அவர்களைத்) தொழுது பின் சென்று; இரட்டுறும் முரசம்என்ன இசைத்ததே இசைக்கின்றாயை - (குறுந்தடியால் அடிக்கப்பட்ட) முறையே ஒலிக்கும் பறையினைப் போன்று (அம்மனிதர் கூறியவற்றையே கூறுபவனாகிய உன்னை; இன்று தலையைப் புரட்டுவன்; பழியொடும் ஒழிவென் போலாம் - இன்று (கொன்று உனது) தலையினை(த் தரையில்) உருளச் செய்வேன்; (சிறியதந்தையைக் கொன்றான் என்னும்) பழியொடும் ஒழிவேனோ?

பிரட்டர் - பிரஷ்டர்; “பிரட்டரைக் காணாகண்” (திருவிசை. திருமாளி. 4,3) புரட்டுதல் - தள்ளி உருட்டுதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'You who carry your strong great mace and, falling from all propriety,
  2. praise men like an outcaste, worship them like a foolish slave and follow behind,
  3. and like a drum beaten in a double beat repeat whatever has been said —
  4. I will send your head rolling today; or shall I end my days with that disgrace?'

What the poem says

Intiracittu now turns his scorn on his uncle Vīṭaṇaṉ. He accuses him of abandoning all decency, flattering mere men like an outcaste, bowing to them like a foolish slave, and echoing their words like a drum that repeats the same double beat.

He threatens to strike off Vīṭaṇaṉ's head that very day, then checks himself, asking whether he should bring on himself the disgrace of killing his own uncle. That restraint runs through the next several verses.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'muraṇ taṭan taṇṭum ēnti, maṉitarai muṟaiyaik kuṉṟip
piraṭṭariṉ pukaḻntu, pētai aṭiyariṉ toḻutu piṉceṉṟu,
iraṭṭuṟum muracam eṉṉa, icaittatē icaikkiṉṟāyaip
puraṭṭuvaṉ talaiyai, iṉṟu; paḻiyoṭum oḻiveṉ pōlām.