கம்பராமாயணம் 9149 · யுத்த 26.165

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'விழிபட, முதல்வர் எல்லாம் வெதும்பினர் ஒதுங்கி வீழ்ந்து
வழிபட, உலகம் மூன்றும் அடிப்பட வந்த தேனும்,
அழிபடை தாங்கல் ஆற்றும் ஆடவர், யாண்டும் அஃகாப்
பழிபட வந்த வாழ்வை யாவரே நயக்கற் பாலார்?

பொருள் · Meaning in Tamil

முதல்வர் எல்லாம் வழிபட வெதும்பினர் ஒதுங்கி வீழ்ந்து வழிபட - (உலகினை இயக்கும்) முதன்மையுடைய கடவுளர் யாவரும் தம் கண்ணின் பார்வைபட்ட அளவிலேயே (அச்சத்தால்) வெதும்பியவராகித் தரைமீது வீழ்ந்து வணங்க; உலகம் மூன்றும் அடிப்பட வந்தேனும் - மூவுலக ஆட்சியும் (தம்) அடிக்கீழ் வந்து பொருந்திற்றாயினும்; அழிபடை தாங்கல் ஆற்றும் ஆடவர் யாண்டும் வெஃகாப் - தோற்றுப் பின்னிடும் (தமது) சேனையினைப் (பின்னிடாது) பொறுத்துத் தாங்கவல்ல வீரர்கள் எக்காலத்தும் விரும்பாத; பழிபடவந்த வாழ்வை யாவரே நயக்கற்பாலார் - பழியுண்டாகவந்த (அடிமை) வாழ்வினை (மானமும் புகழும் நயக்கும்) யார்தான் விரும்புகின்றவராவார்?

“பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்” (புறம்-182) எனும் பாடலும், “பழிமலைந்தெய்திய வாக்கத்தின் சான்றோர், கழி நல்குரவே தலை” (குறள் 657) என்ற குறளும் ஈண்டு ஒப்புக் காணத்தக்கன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Even if, so that the first gods all wilt when one's glance falls on them and shrink back and fall
  2. to worship, and all three worlds come to lie beneath one's feet,
  3. who would ever desire a life that came with disgrace,
  4. which men able to hold up a breaking army never covet anywhere?'

What the poem says

Intiracittu continues his reproach of Vīṭaṇaṉ. Even if a man won such power that the gods fell trembling at his feet and all three worlds were under his rule, no true warrior would want a life bought at the price of disgrace.

The commentary compares a line from the Puṟanāṉūṟu, which says that the noble would not accept even the whole world if it came with blame, and the Tirukkuṟaḷ couplet saying that for the worthy, utter poverty is better than wealth gained through disgrace.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'viḻi paṭa, mutalvar ellām vetumpiṉar otuṅki vīḻntu
vaḻipaṭa, ulakam mūṉṟum aṭippaṭa vantatēṉum,
aḻi paṭai tāṅkal āṟṟum āṭavar, yāṇṭum veḵkāp
paḻi paṭa vanta vāḻvai yāvarē nayakkaṟpālār?