கம்பராமாயணம் 9151 · யுத்த 26.167
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
முந்தைநாள், உலகம் தந்த மூத்தவானோர்கட்கு எல்லாம் தந்தையார் - முற்காலத்தில் உலகங்களைப் படைத்தவரும், (யாவருக்கும்) மூத்தவரும், தேவர்களுக்கெல்லாம் தந்தையாரும் ஆகிய பிரமதேவரின்; தந்தையாரைச் செருவிடைச் சாயத்தள்ளி - தந்தையாராகிய திருமாலைப் போரிலே தளர்ந்து வீழும்படி தள்ளி; கந்தனார் தந்தையாரைக் கயிலையோடு ஒருகைக் கொண்ட - கந்தக் கடவுளின் தந்தையாகிய சிவபெருமானைக் கயிலாய மலையுடன் ஒரு கையிற் பெயர்த்தெடுத்துக்கொண்ட; எந்தையார் அரசு செய்வது, இப்பெரும் பலம் கொண்டேயோ? - என் தந்தையாராகிய இராவணனார் (இவ்வுலகினை ஆட்சி புரிவது (நீ சரண்புகுந்துள்ள மனிதரின்) இப் பெரிய வலிமையினைத் துணையாகக் கொண்டுதானோ?
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'In days gone by, he pushed the father of the father of all the elder gods,
- who brought forth the world, so that he fell in battle;
- he lifted the father of Kantaṉ in one hand along with Kailāsa —
- is it by such great strength as this that my father rules?'
What the poem says
Intiracittu boasts of his father's past exploits to shame Vīṭaṇaṉ. Irāvaṇaṉ once drove back in battle Tirumāl, father of Piramaṉ, who in turn created the world and fathered the elder gods. He also lifted Mount Kailāsa in one hand with Civaṉ, father of Kantaṉ (Murukaṉ), sitting on it.
His scornful question is whether such a king needs the help of these feeble men to rule.