கம்பராமாயணம் 9152 · யுத்த 26.168
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பனிமலர்த்தவிசின் மேலோன் பார்ப்பனக்குலத்துக்கு எல்லாம் - குளிர்ந்த தாமரை மலரின்மேல் உள்ளவனாகிய பிரமனை முதல்வனாகக் கொண்ட வேதியர்குலத்துக்கெல்லாம்; தனிமுதல் தலைவன் ஆன உன்னை வந்து அமரர் தாழ்வார் - ஒப்பற்ற முதன்மையுடைய தலைவனாகிய உன்னைத் தேவர்கள் வந்து வணங்குவார்கள்; நீ மனிதருக்கு அடிமையாய் இராவணன் செல்வம் ஆள்வாய் - (அத்தகைய தலைமை வாய்ந்த) நீயோ (இழிந்த) மனிதர்களுக்கு அடிமையாகி (அவர்களது உதவிபெற்ற) நின் தமையன் இராவணனுக்குரிய அரச செல்வத்தை ஆளுதற்கு உள்ளாய்; இனி உனக்கு மானம் என்னோ? எங்களோடு அடங்கிற்று அன்றே - இனி உனக்குமானம் என்ன இருக்கின்றது? அப்பெருமை (போரில் இறந்தொழியும் நிலையினேம் ஆகிய) எங்களோடு அடங்கி ஒழிந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'You, the one supreme head of the whole Brahmin race
- descended from him who sits on the cool lotus — the gods would come and bow to you;
- now, as a slave to men, you will rule over Irāvaṇaṉ's wealth;
- what honour is left to you now? It has ended with us, has it not?'
What the poem says
Vīṭaṇaṉ belongs to a family of Brahmin descent going back to Piramaṉ, who sits on the lotus. Intiracittu reminds him of this noble ancestry, as a result of which the gods themselves would bow to him.
Now, he says, Vīṭaṇaṉ will enjoy Irāvaṇaṉ's royal wealth only as a slave to men. Whatever honour the family had will die with Intiracittu and the others who fall fighting.