கம்பராமாயணம் 9153 · யுத்த 26.169

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'சொல்வித்தும், பழித்தும், நுங்கை மூக்கினைத் துணிவித்தோரால்,
எல்வித்தும் படைக்கை உங்கள் தமையனை எங்கேளாடும்
கொல்வித்தும், தோற்றுநின்ற கூற்றினார் குலத்தை எல்லாம்
வெல்வித்தும், வாழும் வாழ்வின் வெறுமையே விழுமிது அன்றே?

பொருள் · Meaning in Tamil

சொல்வித்தும், பழித்தும் நுங்கை மூக்கினைத் துணிவித்தோர் ஆர்? - (பிறர் வாயிலாகப்) பழியுரைகளைச் சொல்லச் செய்தும், (தாமே) பழித்தும், உன் தங்கையின் மூக்கினை அறுத்தோர் யார்? (இன்று நீ சரணடைந்திருக்கின்ற இம்மனிதரன்றே; எல்வித்தும்படைக்கை உங்கள் தமையனை எங்களோடும் கொல்வித்தும் - (இம்மனிதர்களைக் கொண்டு) ஒளி விடும் படைகளை உடைய உங்கள் தமையனாகிய இராவணனை (ச்சுற்றத்தாராகிய) எங்களோடு கொல்வித்தும்; தோற்றுநின்ற கூற்றினார் குலத்தை எல்லாம் வெல்வித்தும் - (இதுவரையிலும் எமக்குத்) தோல்வியுற்று(ப்பின்னே) நின்ற கூற்றுவனாரது பரிவாரத்தையெல்லாம் (எங்களை) வெற்றி கொள்ளும்படி செய்தும்; வாழும் வாழ்வின் வெறுமையே விழுமிது அன்றோ? - (அவற்றின் பயனாக நீ பெற்று) வாழ்கின்ற வாழ்க்கை வளத்தைவிட (ஒன்றுமில்லாத) வறுமை நிலையே மிகவும் சிறப்புடைய தல்லவா?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'By the very men who mocked her and had others mock her and cut off your sister's nose,
  2. having your elder brother, his weapon-hand shining, killed along with us,
  3. and making the whole clan of Death, who stood defeated before us, victorious —
  4. is not being left with nothing better than the life you will live this way?'

What the poem says

Intiracittu reminds Vīṭaṇaṉ that the men he has joined are the very ones who insulted and mutilated his sister Cūrppaṇakai, cutting off her nose.

Through these men Vīṭaṇaṉ will have his own brother Irāvaṇaṉ killed along with the rest of the family. He will hand victory over the Rākṣasas to the hosts of Death, who until now had always been beaten by them. Poverty with nothing at all, says Intiracittu, would be better than prosperity won this way.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'colvittum, paḻittum, nuṅkai mūkkiṉait tuṇivittōrāl,
el vittum paṭaik kai uṅkaḷ tamaiyaṉai eṅkaḷōṭum
kolvittum, tōṟṟu niṉṟa kūṟṟiṉār kulattai ellām
velvittum, vāḻum vāḻviṉ veṟumaiyē viḻumitu aṉṟō?