கம்பராமாயணம் 9154 · யுத்த 26.170
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“விசயத்தோளாய்! - வெற்றித்திறம் வாய்ந்த தோள்களை உடையவனே! எழுதி ஏர் அணிந்த திண் தோள் இராவணன் - (வரிக்கோலம்) எழுதப்பெற்ற அழகினைக் கொண்ட திண்ணிய தோள்களையுடைய இராவணன்; இராமன் அம்பால் புழுதியேபாயல் ஆகப்புரண்டநாள் - இராமனது அம்பினால் (தாக்கப்பட்டுப்) புழுதிபடிந்த தரையினையே பாயலாகக்கொண்டு புரள்கின்ற நாளிலே; புரண்டு மேல் வீழ்ந்து அழுதியோ? நீயும் கூட ஆர்த்தியோ - (அவன் தம்பியாகிய நீ அப்புழுதியிற்) புரண்டு அவனது உடம்பின் மேல் வீழ்ந்து அழப்போகின்றாயோ? (அன்றி) நீயும் பகைவருடன் சேர்ந்து (மகிழ்ச்சியால்) ஆரவாரிப்பாயோ? அவனை வாழ்த்தித் தொழுதியோ யாதோ, செய்யத்துணிந்தனை? - (தமையனது உயிர் கொண்டமைக்காக) அந்த இராமனை வாழ்த்தி வணங்கப் போகின்றாயா? (இவற்றுள்) எதனைச் செய்யத் துணிந்துள்ளாய்?”
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'On the day when Irāvaṇaṉ, his strong shoulders adorned with painted designs, by Irāmaṉ's arrow
- rolls in the dust with the dust for his bed, will you roll there and fall upon him
- and weep? Or will you shout with the rest? Or will you praise him and
- bow to him? What is it you have resolved to do, you of the victorious shoulders?'
What the poem says
Intiracittu imagines the day when Irāvaṇaṉ, his mighty shoulders painted with decorative designs, lies dead in the dust, killed by Irāmaṉ's arrow.
He asks Vīṭaṇaṉ, with bitter irony calling him 'you of the victorious shoulders', what he will do then. Will he throw himself on his brother's body and weep, join the enemy in their shouts of triumph, or bow down and praise Irāmaṉ for killing him?