கம்பராமாயணம் 9155 · யுத்த 26.171

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'ஊனுடை உடம்பின் நீங்கி, மருந்தினால் உயிர்வந்து உய்யும்
மானிடர் இலங்கை வேந்தைக் கொல்வரே? நீயும் அன்னான்
தான் உடை செல்வம் துய்க்கத் தகுதியோ? சரத்தினோடும்
வான் இடைப் புகுதி அன்றே, யான் பழி மறுக்கின்! 'என்றான்.

பொருள் · Meaning in Tamil

ஊனுடை உடம்பின் நீங்கி மருந்தினால் உயிர் வந்து எய்தும் - ஊனுடைய உடம்பினின்றும் (உயிர் நீங்கி, மருந்தினாலே உயிர் வந்து சேரப் பெற்றுப் பிழைத்த; மானிடர் இலங்கை வேந்தைக் கொல்வரே? - மனிதர்கள் இலங்கை வேந்தனைக் கொல்லவல்லாரோ? நீயும் அன்னான் தானுடைச் செல்வம் துய்க்கத் தகுதியோ? - நீயும் அவ்விராவணன் பெற்றுடைய செல்வத்தை நுகர்தற்குத் தகுதியுடையாய் ஆவாயோ? யான் பழி மறுக்கில் சரத்தினோடும் வானிடைப் புகுதி அன்றே” என்றான் - (சிறியதந்தையாகிய உன்னைக் கொல்லுதல்) பழி என்பதனை மறுத்து நின்னை (அம்பினாற்) கொல்லப் புகின் நீ அந்த அம்பினோடும் வானுலகத்தை அடைவாய் அல்லையோ? என்று கூறினான்.

தனது யாகத்தை அழிவித்தும், தனது குலத்தைக் காட்டிக்கொடுத்தும் இலங்கை அழிவிற்குத்தானுமொரு காரணமாயிருக்கும் வீடணன் போர் முகத்தில் பகைவனோடு நின்றுமுரண்பட்ட நிலையிலும் தந்தை முறையாகும் அவனைக் கொல்லப் பழிபார்க்கும் இந்திரசித்தனின் பண்பு நிலை பாராட்டுதற்குரியது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Will men whose life left their fleshly bodies and came back to them only by medicine
  2. kill the king of Ilaṅkai? And are you fit to enjoy
  3. the wealth that belongs to him? If I set aside the disgrace,
  4. you would enter the sky along with my arrow, would you not?' he said.

What the poem says

Intiracittu ends his tirade. He scorns the idea that Irāmaṉ and Ilakkuvaṉ, who were once killed and brought back to life only by the healing herbs Aṉumaṉ fetched, could ever kill the king of Ilaṅkai, or that Vīṭaṇaṉ deserves to enjoy Irāvaṇaṉ's wealth.

If he did not shrink from the shame of killing his own uncle, he says, one arrow would send Vīṭaṇaṉ to heaven. The commentary praises his character: even facing the uncle who ruined his sacrifice and betrayed his race, he refuses to kill a man who stands to him as a father.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ūṉuṭai uṭampiṉ nīṅki, maruntiṉāl uyir vantu eytum
māṉiṭar ilaṅkai vēntaik kolvarē? nīyum aṉṉāṉ
tāṉuṭaic celvam tuykkat takutiyō? carattiṉōṭum
vāṉiṭaip pukuti aṉṟē, yāṉ paḻi maṟukkiṉ! 'eṉṟāṉ.