கம்பராமாயணம் 9156 · யுத்த 26.172
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அவ்வுரை அமையக்கேட்ட வீடணன் - (இந்திரசித்து கூறிய) அந்த வார்த்தையினை (மனம்) பொருந்தக்கேட்ட வீடணன்; அலங்கல் மோலி செவ்விதின் துளக்கி - மாலையணிந்த முடியினை நன்கு அசைத்து; மூரல் முறுவலும் தெரிவது ஆக்கி - (தன்முகத்தே) புன் சிரிப்பு வெளிப்படச்செய்து; “ஐய! வெவ்விது பாவம் சாலத்தருமமே விழுமிது - “ஐயனே! பாவம் கொடுமையுடையது அறமே மிகவும் சிறந்தது; “இவ்வுரை கேட்டி!” என்னா இனையன விளம்பலுற்றான் - (யான் கூறும்) “இம்மொழியினைக் கேட்பாயாக” என்று (பின்வரும்) இம்மொழிகளைக் கூறத் தொடங்கினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Vīṭaṇaṉ, having heard those words through, shook his garlanded crown
- gracefully, and letting a gentle smile show, said,
- 'Sin is cruel; dharma alone is greatly excellent, sir;
- hear these words,' and began to speak as follows.
What the poem says
Vīṭaṇaṉ listens calmly to his nephew's abuse. Then he shakes his garlanded head and smiles faintly, unruffled.
He begins his reply with a simple principle, that sin is cruel and righteousness is supreme, and asks Intiracittu to hear him out. The following verses give his defence.