கம்பராமாயணம் 9161 · யுத்த 26.177
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“அறத்தினைப் பாவம் வெல்லாது” என்னும் அது அறிந்து - “அறத்தினைப் பாவம் வெல்லாது” என்று ஆன்றோர் கூறும் அவ்வுண்மையினை அறிந்து; “ஞானத்திறத்தினும் உறும்” என்று எண்ணி தேவர்க்கும் தேவைச் சேர்ந்தேன் - (அவ் அறத்தின் மூர்த்தியை அடைதலால்) ஞானத்திறத்தாலும் மிக்க பயன்பொருந்தும் என்று கருதித் தேவர்க்கும் தேவனாகிய இராமபிரானைச் சரணடைந்தேன்; புறத்தினில் புகழே ஆக பழியொடும் புணர்க - (எனக்குப்) புறத்தே புகழே உண்டாகுக; அன்றிப் பழியொடு பொருந்துக; போகச் சிறப்பினிப் பெறுக! தீர்க என்றனன் சீற்றம் தீர்ந்தான் - (பேதைமை தீர்ந்த) ஞானச் சிறப்பினை (யான் பெறுக அன்றிப் பெறாதொழிக (அது பற்றிக் கவலை இல்லை) என்று கூறினான் சினமாகிய குற்றத்தினை விட்டொழித்தவனாகிய வீடணன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Knowing the saying "Sin does not conquer dharma", and thinking, "The way of wisdom
- too will bring its reward," I came to the God of the gods;
- outwardly let it be fame, or let it be joined with disgrace; let the glory of enjoyment
- come to me now, or let it go,' said he who had put away anger.
What the poem says
Vīṭaṇaṉ, who has put all anger aside, concludes his answer. He knew the wise saying that sin can never defeat righteousness, and believed that refuge in Irāmaṉ, God of gods and the embodiment of righteousness, would also bring true wisdom. So he surrendered to him.
Whether the world now praises or blames him, and whether or not he gains the joys of kingship, makes no difference to him.