கம்பராமாயணம் 9162 · யுத்த 26.178
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
உருமின் வெய்யோன் - இடியினை யொத்த வெம்மை உடையனாகிய இந்திரசித்து; பெறும் சிறப்பு எல்லாம் என் கைப் பிறைமுகப் பகழி பெற்றால் - (வீடணனை நோக்கி) “நீ பெறக்கருதியுள்ள சிறப்புக்கள் யாவும் என்கையிலுள்ள பிறைமுக அம்பு ஒன்றினைப் பெற்றால்; இறும் சிறப்பு அல்லால் எங்கு இனிப் போவது?” என்னா - அழிந்தொழியும் சிறப்பாய் முடிவதன்றி (அழியாது) இனி அப்பால் செல்வது எங்கே? என்று சொல்லி; தெறுஞ்சிறைக் கலுழன் அன்ன ஒரு கணை தெரிந்து - (பாம்பினை) அழிக்கும் சிறகினை உடைய கருடனை ஒத்ததாகிய ஓர் அம்பினைத் தெரிந்தெடுத்து; செம்பொன் உறும் சுடர் கழுத்தை நோக்கி நூக்கினான் - செம்பொன் அணிகள் பொருந்திய ஒளியினை உடைய (வீடணனது) கழுத்தை நோக்கிச் செலுத்தினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'If all the glory you hope to win meets the crescent-headed arrow in my hand,
- it will be a glory that is cut off; where else could it go from there?' he said,
- and choosing an arrow like Garuḍa with his destroying wings, at the neck
- gleaming with red gold he aimed and shot — he who was fierce as thunder.
What the poem says
Vīṭaṇaṉ's calm reply only enrages Intiracittu further. Fierce as a thunderbolt, he sneers that all the glory his uncle hopes for will end the moment it meets his crescent-headed arrow.
He chooses an arrow as deadly as Garuḍa, the eagle whose wings destroy serpents, and shoots it at Vīṭaṇaṉ's neck, which is hung with ornaments of red gold.