கம்பராமாயணம் 9165 · யுத்த 26.181

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

“வேல் கொடு கொல்லல் உற்றான்” என்று ஒரு வெகுளி பொங்க - (இந்திரசித்து என்னும் இவன்) வேற்படையினைக் கொண்டு (என்னைக்) கொல்லுதற்கு முற்பட்டான்” என்று (தன்மனத்தே) கோபம் கிளர்ந்து எழ; கால்கொடு காலின் கூடிக்கை தொடர் கனகத் தண்டால் - காலினால் காற்றினைப் போன்று (விரைந்து அவனை) அடைந்து (தன் கையிற்பற்றிய பொன்மயமான தண்டாயுதத்தால்; கோல் கொளும் ஒருவனோடும் கொடித்தடந்தேரில் பூண்ட - தாற்றுக் கோலினைக் கொண்ட (தேர்ப்பாகனாகிய) ஒருவனோடு கொடியினையுடைய பெரிய தேரிற் பூட்டப்பட்டுள்ள; பால்கொளும் புரவி எல்லாம் படுத்தினான் துடிப்புமாற - தொகுதியினைக் கொண்ட குதிரைகள் எல்லாவற்றையும் (அவற்றின் உயிர்த்) துடிப்பு நீங்கக் கொன்று வீழ்த்தினான் வீடணன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'He set out to kill me with a spear!' — at this a rage welled up in him;
  2. rushing on his feet like the wind, with the golden mace held in his hand
  3. he struck down, along with the one who held the goad, all the horses in their teams
  4. yoked to the great bannered chariot, until they stopped twitching.

What the poem says

Vīṭaṇaṉ, roused to anger at last because his nephew has tried to kill him with a spear, rushes forward on foot as swift as the wind.

With his golden mace he kills Intiracittu's charioteer, the man holding the goad, and every horse harnessed to the great bannered chariot, until none of them so much as stirs.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vēlkoṭu kollal uṟṟāṉ' eṉṟu, oru vekuḷi poṅka,
kālkoṭu kāliṉ kūṭik kai toṭar kaṉakat taṇṭāl,
kōl koḷum oruvaṉōṭum, koṭit taṭan tēril pūṇṭa
pāl koḷum puravi ellām paṭuttiṉāṉ, tuṭippu māṟa.