கம்பராமாயணம் 9166 · யுத்த 26.182
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அழிந்த தேர் மீது நின்றான் அவன் தோளின் மேலும் - அழிவுற்ற (அந்தத்) தேரின் மேல் நின்றவனாகிய இந்திரசித்து அவ்வீடணன் தோளின் மேலும் இலக்குவன் புயத்தின் மேலும் ஒழிந்தவர் உரத்தின் மேலும் - இலக்குவன் தோளின் மேலும் எஞ்சியுள்ள வானரவீரர் மார்பின் மேலும்; ஆயிரகோடி அம்புபொழிந்து உதிர நீர் வாரி ஓதம் - ஆயிர கோடி அளவினவாகிய அம்புகளைச் சொரிந்து குருதி நீராகிய பெருவெள்ளம்; அழிந்து இழிந்து ஓட நோக்கி அண்டமும் இரிய ஆர்த்தான் - வரம்பழிந்து இழிந்து ஓடக்கண்டு அண்டமும் நிலைகெட்டு ஓடும்படி பேராரவாரம் செய்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He who stood on the wrecked chariot rained a thousand crores of arrows
- on that one's shoulders, on Ilakkuvaṉ's arms,
- and on the chests of the others, and watching the flood of the sea of blood
- break its banks and pour down, he roared so that the universe fled.
What the poem says
Still standing on his wrecked chariot, Intiracittu fires a vast hail of arrows into Vīṭaṇaṉ's shoulders, Ilakkuvaṉ's arms and the chests of the remaining monkey warriors.
Blood floods out like a sea bursting its banks, and Intiracittu gives a roar of triumph so loud that the universe itself seems to flee.