கம்பராமாயணம் 9167 · யுத்த 26.183
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆர்த்தவன்; அனையபோழ்தின் “அழிவு இலாத்தேர்கொண்டு அன்றி - (அங்ஙனம்) ஆரவாரித்தவனாகிய இந்திரசித்து, அப்பொழுது அழிவுறாத தேரினைக் கொண்டல்லாமல்; போர்த்தொழில் புரியல் ஆகாது” என்பது ஒர் பொருளை உன்னி - போர்த்தொழில் புரிதல் முடியாது என்பதொரு பொருளை (மனத்தில்) எண்ணி; பார்த்தவர் இமையாமுன்னம் “விசும்பிடைப் படர்ந்தான்” என்னும் - தன்னை நோக்கியவர்கள் “கண் இமையினை மூடித்திறப்பதற்குள் ஆகாயத்தில் மறைந்து சென்றான் (இந்திரசித்து)” என்னும்; வார்த்தையை நிறுத்திப் போனான் இராவணன் மருங்குபுக்கான் - சொல்லினை(ப் போர்க்களத்தில்) நிலைக்கச் செய்து (மறைந்து) சென்றவனாகி இராவணன் பக்கத்திற் புக்கான்.
ஆர்த்தவன் - இந்திரசித்து. 'இமைப்பதன் முன்னம் விசும்பிடை மறைந்தான்' என்று அனைவரும் பேசிக் கொள்ளும்படி மறைந்து போனான் என்பதாம். 'அழிவில்லாத தேர் கொண்டாலன்றி போர் வெல்லலாகாதென' எண்ணியவனாய் இந்திரசித்து இமைப்பதன் முன் வானில் மறைந்து சென்றான் என்றவாறு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He who had roared, at that moment, considering the thought, 'Without a chariot
- that cannot be destroyed, I cannot carry on this fight,'
- left behind him the saying, 'Before the onlookers could blink he went off into the sky,'
- and departed, and went in to Irāvaṇaṉ's side.
What the poem says
Having raised his war cry, Intiracittu reflects that he cannot go on fighting without a chariot that cannot be destroyed.
He vanishes so suddenly that all anyone can say afterwards is that he disappeared into the sky before they could blink. He goes straight to his father, Irāvaṇaṉ. This verse ends the chapter on the Nikumpalai sacrifice.