கம்பராமாயணம் 9169 · யுத்த 27.2

Section யுத்த காண்டம் / 27. இந்திரசித்து வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'தொடங்கிய வேள்வி முற்றப் பெற்றிலாத் தொழில், நின் தோள்மேல்
அடங்கிய அம்பே என்னை அறிவித்தது; அழிவு இல் யாக்கை
நடுங்கினை போலச் சாலத் தளர்ந்தனை; கலுழன் நண்ணப்
படம்குறை அரவம் ஒத்தாய்; உற்றது பகர்தி 'என்றான்.

பொருள் · Meaning in Tamil

தொடங்கிய வேள்வி முற்றுப் பெற்றிலாத் தொழில் - நீ தொடங்கிய வேள்வி முற்றுப் பெறாத தன்மையை; நின் தோள் மேல் அடங்கிய அம்பே என்னை அறிவித்தது - நின் தோள் மேல் தைத்துள்ள அம்பே எனக்கு அறிவித்தது; அழிவு இல் யாக்கை நடுங்கினை போலச் சாலத் தளர்ந்தனை - அழிவு இல்லாத உடம்பு (முதுமையால்) நடுங்கினவன் போல மிகவும் தளர்ந்து; கலுழன் நண்ணப் படங்குறை அரவம் ஒத்தாய் - கருடன் நெருங்கியதால் படம் ஒடுங்கின பாம்பு போன்றோய்; உற்றது பகர்தி என்றான் - நிகழ்ந்ததைச் சொல் என்று இராவணன் வினவினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'That the sacrifice you began was never completed,
  2. the arrows sunk in your shoulders have told me; your undying body
  3. is greatly weakened, as if you were trembling; you are like a snake whose hood shrinks
  4. when Garuḍa draws near; tell me what has happened,' he said.

What the poem says

Irāvaṇaṉ sees at once from the arrows lodged in his son's shoulders that the sacrifice was never completed.

His son's body, which no weapon could destroy, is shaking and exhausted. Irāvaṇaṉ compares him to a cobra that lowers its hood when Garuḍa, the serpent-eating eagle, swoops near, and asks him to explain what happened.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'toṭaṅkiya vēḷvi muṟṟup peṟṟilāt toḻil, niṉ tōḷmēl
aṭaṅkiya ampē eṉṉai aṟivittatu; aḻivu il yākkai
naṭuṅkiṉai pōlac cālat taḷarntaṉai; kaluḻaṉ naṇṇap
paṭam kuṟai aravam ottāy; uṟṟatu pakarti 'eṉṟāṉ.