கம்பராமாயணம் 9170 · யுத்த 27.3

Section யுத்த காண்டம் / 27. இந்திரசித்து வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சூழ்வினை மாயை எல்லாம் உம்பியே துடைக்க, சுற்றி
வேள்ியைச் சிதைய நூறி வெகுளியால் எழுந்து வீங்கி,
ஆள்வினை ஆற்றல் தன்னால் அமர்த் தொழில் புக்கு நின்றான்;
தாழ்வு இலாப் படைகள் மூன்றும் தொடுத்தனென்; தடுத்து விட்டான்.

பொருள் · Meaning in Tamil

சூழ்வினை மாயம் எல்லாம் உம்பியே துடைக்க - யான் செய்த சூழ்ச்சியையும் மாயையும் உன் தம்பி வீடணனே உண்மை சொல்லிப் பயனிலதாக்கி விட்டமையால்; வேள்வியைச் சிதைய நூறி, வெகுளியால் எழுந்து வீங்கி - (இலக்குவன்) தன் சேனையோடு முற்றுகையிட்டு வேள்வியைச் சிதையுமாறு அழித்து விட்டுக் கோபத்தால் கிளர்ச்சியைப் பெற்றுப் பூரித்து நிற்க; ஆள்வினை ஆற்றல் தன்னால் அமர்த்தொழில் தொடங்கி - யானும் முயற்சி மிக்க வலிமையினால் போர்த் தொழில் தொடங்கி, யார்க்கும் தாழ்வு இலாப் படைகள் மூன்றும் தொடுத்தனென் தடுத்து விட்டான் - யார்க்கும் தாழ்தலில்லாத தெய்வப் படைகள் மூன்றையும் தொடுத்து விட்டேன் அவன் அவற்றைத் தடுத்து விட்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Your younger brother wiped out all the cunning illusions I had planned; surrounding us,
  2. they smashed the sacrifice to ruin; rising and swelling in rage,
  3. by the strength of my own effort I began the fighting; the three weapons
  4. that yield to no one I fitted and loosed; he stopped them.'

What the poem says

Intiracittu tells his father what happened. Vīṭaṇaṉ, Irāvaṇaṉ's own brother, exposed all his schemes and illusions. Ilakkuvaṉ and his army surrounded the shrine and wrecked the sacrifice.

Intiracittu fought back with all his might and used the three supreme divine weapons, those of Piramaṉ, Tirumāl and Civaṉ, which no one had ever withstood. Ilakkuvaṉ stopped every one of them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cūḻ viṉai māyam ellām umpiyē tuṭaikka, cuṟṟi
vēḷviyaic citaiya nūṟi vekuḷiyāl eḻuntu vīṅki,
āḷviṉai āṟṟaltaṉṉāl amart toḻil toṭaṅki yārkkum;
tāḻvu ilāp paṭaikaḷ mūṉṟum toṭuttaṉeṉ; taṭuttu viṭṭāṉ.